மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே அணியில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல் 2020 தொடரின் 41-வது லீக் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணியை தொடர் தோல்விகள் சந்தித்து வரும் சி.எஸ்.கே அணி எதிர்கொள்ள உள்ளது. ப்ளே ஆப் வாய்ப்பை சி.எஸ்.கே அணி தக்கவைத்து கொள்ள இன்றையப் போட்டி முக்கியத்துவமானது. அதே சமயம் சி.எஸ்.கே அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்க மும்பை அணியும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றையப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சாமிருக்காது.
சி.எஸ்.கே அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ராஜஸ்தான் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சி.எஸ்.கே படுதோல்வியடைந்ததால் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக சி.எஸ்.கே அணியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் இருப்பதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த தொடரில் படுமோசமாக விளையாடி வரும் கேதர் ஜாதவிற்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்குவது ஏன் என்பதே அணி கேள்விகுறியாக உள்ளது. மேலும் இம்ரான் தாஹீருக்கு வாய்ப்பு வழங்காமல் இருப்பதும் பலரை கோபமடைய வைத்துள்ளது.
எனவே இன்றைய அணியில் இளம் வீரர்கள் கட்டாயம் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓபனிங்கில் ஒரிரு போட்டியில் மட்டும் அதிரடி காட்டி மற்ற போட்களில் சொதப்பிய வாட்சன் இன்று அணியில் இடம்பிடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.