• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • CSK vs SRH | சென்னை அணியில் முக்கிய மாற்றங்கள்? தோனி வியூகம்

CSK vs SRH | சென்னை அணியில் முக்கிய மாற்றங்கள்? தோனி வியூகம்

CSK

CSK

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் சென்னை அணியில் முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 44-வது லீக் போட்டியில் சென்னை - ஹைதராபாத் அணிகள் சார்ஜா மைதானத்தில் இன்று மோதுகின்றன. சென்னை அணி ஒரே ஒரு வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும்.சென்னை அணியை பொறுத்தவரை ஓப்பனிங்கில் ருத்ராஜ், டு பிளிசிஸ் வழக்கமான அதிரடி காட்டி வருகின்றனர்.

    மிடில் ஆர்டரில் மொயீன் அலி, ரெய்னா, ராயுடு ஆகியோர் பலமாக உள்ளனர். பின்வரிசையில் ஜடேஜா, தோனி, பிராவோ என பலமாக உள்ளது. கேப்டன்ஷிப்பில் தோனி கலக்கினாலும் பேட்டிங்கை பொறுத்தவரை அவரது ஆட்டம் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. பவுலிங்கில் தீபக் சாஹர், ஷரத்துல் தாக்கூர் உள்ளிட்டோர் மிரட்டுகின்றனர்.

    ஐதராபாத் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றியை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இனிவரும் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என்பதை சூசகமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    Also Read : கே.எல்.ராகுலுக்குப் பேட்டிங் பாடம் எடுத்த சேவாக்

    இந்த அணியை பொறுத்தவரை அதன் பலமே கேப்டன் கேன் வில்லியம்சன் தான். இதனால் அவரது விக்கெட்டை வீழ்த்த சென்னை அணி அதீத முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. புவனேஸ்வர் குமார், ஜேசன் ஹோல்டர், சந்தீப் ஷர்மா, ரஷித் கான் ஆகியோர் பந்துவீச்சில் எதிரணியை அச்சுறுத்த காத்திருக்கின்றனர்.

    இரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியதில் 11 வெற்றிகளுடன் சென்னை அணியின் கையே ஓங்கியுள்ளது.

    சிஎஸ்கே உத்தேச அணி : ருதுராஜ், டூ-பிளெசிஸ், மொயின் அலி, அம்பாதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, பிராவோ, சர்துல் தாகூர், தீபக் சாஹர், ஹேசில்வு்ட்

    ஹைதராபாத் : ஜேசான் ராய், விருதமான் சஹா, கேன் வில்லியம்சன், ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் ஷமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: