சி.எஸ்.கே வீரர் மோனு குமாருக்கு அன்பாக முத்தமிடும் சாக்ஷி தோனி... இவர் யார் தெரியுமா?

மோனு குமார் - சாக்ஷி

IPL 2020 | Monu Kumar | தற்போது பெங்களூரு அணிக்கான எதிரான போட்டியில் இடம் கிடைத்துள்ளதால் அவர் யார் என்று பலர் தேட தொடங்கி உள்ளனர்.

  • Share this:
    பெங்களூரு அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் சர்துல் தாகூருக்கு பதிலாக மோனு குமார் சி.எஸ்.கே அணியில் புதிதாக இடம்பெற்றிருந்தார். இவர் அணியில் இடம் பெற்றதை தொடர்ந்து சாக்ஷி தோனி இவருக்கு அன்பாக தலையில் முத்தமிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

    ஐ.பி.எல் 2020 தொடரில் பெங்களூரு அணிக்கான போட்டியில் மோனு குமார் சி.எஸ்.கே போட்டியில் புதுமுகமாக அறிமுகமாகி உள்ளார். மோனு குமார் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். சி.எஸ்.கே அணி 2018-ம் ஆண்டு தடையிலிருந்து மீண்ட பின் இவர் சி.எஸ்.கே அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் 2 வருடங்களாக அணியல் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது பெங்களூரு அணிக்கான எதிரான போட்டியில் இடம் கிடைத்துள்ளதால் அவர் யார் என்று பலர் தேட தொடங்கி உள்ளனர்.

    யார் இந்த மோனு குமார்?

    ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் மோனு குமார். இதனால் இவர் தோனியுடன் நெருக்கமாக உள்ளார். ராஞ்சியை சேர்ந்தவர் என்பதால் சாக்ஷி தோனிக்கும் இவர் மிகவும் அறிமுகமானவர். தோனி பல போட்டிகளில் பங்கேற்க செல்லும் அவரது மகள் ஷிவா தோனியை இவர் தூக்கி கொண்டு வருவார். தோனி குடும்பத்துடன் நெருங்கிய நண்பராக மோனு குமார் உள்ளார்.

    2017-ம் ஜார்கண்ட் அணிக்காக தோனியுடன் இணைந்து விஜய் ஹாசரே கோப்பையில் விளையாடி உள்ளார். அந்த போட்டிகளின் போது தோனியிடம் மோனு குமார் அதிக நேரங்களை செலவிட்டுள்ளார். இதையடுத்து 2018-ம் ஆண்டு மோனு குமார் சி.எஸ்.கே அணியில் இடம் பிடித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு பின் தற்போது இவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

    மோனு குமார் 2014-ம் ஆண்டு நடைபெற்ற U19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி உள்ளார். 2014 U19 உலகக்கோப்பையில் மோனு குமார் உடன் ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், சர்பராஸ் கான் விளையாடி உள்ளனர். இவர்கள் அனைவரும் கிரிக்கெட்டில் தங்களது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ள நிலையில் மோனு குமார் மீண்டும் கிரிக்கெட்டில் தடம் படித்துள்ளார். இன்றையப் போட்டியில் 2 ஓவர்கள் வீசிய மோனு குமார் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 20 ரன்கள் கொடுத்துள்ளார்.















    ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published: