சி.எஸ்.கே அணியின் கேப்டனாக முதல் தேர்வு தோனி இல்லை, இவர்தான் - பத்ரிநாத் ஓபன் டாக்

மகேந்திர சிங் தோனி

 • Share this:
  சி.எஸ்.கே அணியின் கேப்டனாக முதல் தேர்வு மகேந்திர சிங் தோனி இல்லை என்று சுப்ரமணியம் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

  சி.எஸ்.கே அணி என்றாலே சட்டென்று அனைவரது நினைவிற்கும் வருபவர் மகேந்திர சிங் தோனி தான். 2008-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடங்கியது முதல் சென்னை அணியின் வெற்றிக்கு பிராதன காரணமாக திகழ்பவர் தோனி.

  தோனியின் தலைமையில் ஐ.பி.எல் கோப்பையை சி.எஸ்.கே 3 முறை வென்றுள்ளது. சென்னை அணி பங்கேற்ற அனைத்து ஐ.பி.எல் தெடரிலும் ப்ளே ஆப் சுற்று வரை முன்னேறி  சாதனை படைத்துள்ளது. தோனியை கேப்டனாக தேர்வு செய்ததே சி.எஸ்.கே-வின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

  ஆனால் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக முதல் தேர்வு தோனி இல்லையென்று இந்திய அணி மற்றும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கூறியுள்ளார். சுப்ரமணியம் பத்ரிநாத் ஐ.பி.எல் தொடரின் சில சீசன்களில் சி.எஸ்.கே அணிக்காக விளையாடி உள்ளார்.

  இது தொடர்பாக அவர் கூறுகையில், “2008-ம் ஆண்டு ஐ.பி.எல் ஏலம் தொடங்குவதற்கு முன சி.எஸ்.கே, தோனியை ஏலத்தில் எடுக்க முயற்சிக்கவில்லை. விரேந்திர் சேவாக்கை தான் சி.எஸ்.கே அணி முதலில் கேப்டனாக்க முயன்றது.

  சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் தங்களது சொந்த அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்தனர். அதேப்போல் டெல்லி அணிக்காக விளையாட விருப்பம் உள்ளதாக சேவாக் தெரிவித்துவிட்டார். டெல்லி அணியின் ஐகான் வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

  இதையடுத்து சென்னை அணிக்கு நட்சத்திர வீரர் ஒருவரை தேர்வு செய்ய முயன்றனர். அப்போது இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பையை வென்றது. எனவே அவர்கள் தோனியை கேப்டனாக தேர்வு செய்தார்கள்“ என்றுள்ளார் பத்ரிநாத்.  மேலும் ரசிகர்கள் பலருக்கு சேவாக்கை வாங்குவதற்கு பதில் சி.எஸ்.கே தோனியை ஏலம் எடுத்தது தெரியாது. ஆனால் தற்போது சென்னை அணியின் முகமாக தோனி உள்ளது பெருமையாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
  Published by:Vijay R
  First published: