• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சூர்யகுமார் யாதவ்வை தாடி வைத்த பெண்ணாக்கிய பிரிதிவி ஷா- ருசிகர பிறந்த நாள் வாழ்த்து

சூர்யகுமார் யாதவ்வை தாடி வைத்த பெண்ணாக்கிய பிரிதிவி ஷா- ருசிகர பிறந்த நாள் வாழ்த்து

சூரியகுமார் யாதவ்வுக்கு வித்தியாச வாழ்த்து.

சூரியகுமார் யாதவ்வுக்கு வித்தியாச வாழ்த்து.

  • Cricketnext
  • Last Updated :
  • Share this:
    மும்பை அணியின் சூரியகுமார் யாதவுக்கு வயது 31 ஆகிறது, இன்று பிறந்த தினம் கொண்டாடுகிறார், இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

    சூரியகுமார் யாதவின் பிறந்த தினத்துக்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக வீரர்கள் என்று அனைவரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இதில் ஒரு மெசேஜ்தான் மும்பை அணியின் சக வீரரான பிரிதிவ் ஷா தெரிவித்த ருசிகர வாழ்த்தாகும். சூரிய குமார் யாதவ் புகைப்படத்தை வைத்து விளையாட்டு காட்டி, அவரை தாடி வைத்த பெண்ணாக உருவகித்த படத்தை பிரிதிவி ஷா ஷேர் செய்துள்ளார்.

    ஜெண்டர் ஸ்வாப் பில்டரை வைத்து இந்த இமேஜை உருவாக்கியுள்ளார் பிரிதிவி ஷா. “ஹேப்பி பர்த் டே சூரியகுமார் யாதவ்” என்று அந்தப் புகைப்படத்திற்கு வாசகமிட்டுள்ளார் பிரிதிவி ஷா. அதனுடன் மூன்று இமோஜிக்களையும் பதிவிட்டுள்ளார், சில்லி ஃபேஸ், ஆனந்தக் கண்ணீர் இமோஜி, பிறகு ரெட் ஹார்ட் ஆகிய இமோஜிக்களை பகிர்ந்துள்ளார் பிரிதிவி ஷா.

    சூரியகுமார் யாதவ் மற்றும் பிரிதிவி ஷா இடையே நல்ல சகோதரத்துவமான ஒரு நட்புறவு உள்ளது. இருவருமே சமூக ஊடகங்களில் தங்கள் ரசிகர்களுக்கு விருந்து வைப்பவர்கள்தான்.



    இந்திய அணியின் இங்கிலாந்து தொடரில் சூரியகுமார் யாதவின் ஃபேவரைட் படமான Andaz Apna Apna  படத்திலிருந்து இருவரும் ஒரு சீனை நடித்துக் காட்டி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தனர். 



    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் சூரியகுமார் யாதவுக்கு பிறந்த தின வாழ்த்துக்களை கூறியுள்ளது: “SKY’s the limit! Happy birthday to Indian star Suryakumar Yadav,” என்று தெரிவித்துள்ளது.

    சூரியகுமார் யாதவை மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் போட்டியில் ரசிகர்கள் பார்க்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: