Home /News /sports /

CSK vs RCB | சென்னை அணியில் முக்கிய மாற்றம்? தோனி அதிரடி முடிவு

CSK vs RCB | சென்னை அணியில் முக்கிய மாற்றம்? தோனி அதிரடி முடிவு

சென்னை வீரர்கள்

சென்னை வீரர்கள்

CSK Predicted XI | ஆர்சிபி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணியில் முக்கிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் செயல்பாடு பல விமர்சனங்களை எழுப்பியது. இதற்கு கேப்டன் பொறுப்பை ரவிந்திர ஜடேஜாவிடம் கொடுத்தது தான் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். கேப்டன் பொறுப்பில் இருப்பதால் ஜடேஜா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தடுமாறி வந்தார். இதையடுத்து கேப்டன் பொறுப்பை தோனிக்கே அவர் மீண்டும் ஒப்படைத்தார். தோனி கேப்டன் பொறுப்பை ஏற்ற பின் சிஎஸ்கே மே 1-ம் தேதி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.

    இதையடுத்து சிஎஸ்கே வெற்றிபாதைக்கு திரும்பினாலும் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது சிரமம் தான். சென்னை அணிக்கு மீதம் 5 போட்டிகள் உள்ளன. இந்த 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதுவும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றே தீர வேண்டும்.

    Also read : ஆர்சிபிக்காக கோலி செய்ததை சிஎஸ்கேவுக்காக தோனி செய்வாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    மேலும் அணியில் கடந்த சில போட்டிகளாக சொதப்பி வரும் வீரர்களுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ந்த வகையில் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என இரண்டிலுமே சொதப்பி வரும் டுவைன் பிரிட்டோரியஸை நீக்கி அவருக்கு பதிலாக இலங்கை வீரர் மதீஷா பதிரானா களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று மிட்சர் சாட்னருக்கு பதிலாக டுவைன் பிராவோ மீண்டும் அணியில் இடம்பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

    சிஎஸ்கே உத்சேத அணி : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி(c/w), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, டுவைன் பிரிட்டோரியஸ்/மதீஷா பதிரானா , மகேஷ் தீக்ஷனா, சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி
    Published by:Vijay R
    First published:

    Tags: Chennai Super Kings, CSK, IPL 2022, MS Dhoni

    அடுத்த செய்தி