பெற்றோருக்கு கொரோனா என்ற போதும் ஊருக்கு உதவி: மக்கள் மனதைத் தொட்ட சாஹல்

யஜுவேந்திர சாஹல்.

தனது பெற்றோருக்குக் கொரோன தொற்று ஏற்பட்ட போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தவித்த குடும்பம் ஒன்றுக்கு உதவி செய்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் லெக் ஸ்பின்னர் சாஹல்

 • Share this:
  ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து வீடு திரும்பிய யஜுவேந்திர சாஹல் தன் பெற்றோருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

  இந்தியாவின் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி நுரையீரல் பாதிப்பில் நோயாளிகள் மூச்சுத்திணறி ஆக்சிஜன் இல்லாமல் மரணிக்கும் கொடுமை அதிகரித்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கவும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன.

  இதில் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல பிரபலங்கள் கொரோனா பாதிப்புக்கு நிவாரணம் அளித்து உதவி புரிகின்றனர். அதில் இந்திய லெக் ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹல் தனது உதவியினால் மக்கள் மனதை வென்றுள்ளார்.

  ஐபிஎல் தொடர் ரத்தானவுடன் வீடு திரும்பிய சாஹல் தன் பெற்றோருக்குக் கொரோனா தொற்று இருப்பதையும் தாயார் வீட்டிலும் தந்தை மருத்துவமனையிலும் சிகிச்சையில் இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

  ஆனாலும் சாஹல் மனதைத் தேற்றிக் கொண்டு கொரோனா உதவி கேட்டவருக்கு உதவி புரிந்து அசத்தியுள்ளார். பெங்களூருவில் கெட்டோ என்ற தன்னார்வ அமைப்பின் வலைத்தளத்தில் ஒரு நபர் தனது தோழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாகவும் இத்தனை நாட்கள் அவருக்காக தான் செலவழித்ததாகவும் மேலும் ரூ.4 லட்சம் தேவைப்படுகிறது என்றும் யாரேனும் உதவினால் நல்லது என்றும் கேட்டிருந்தார்.

  உடனே சாஹல் அந்த வலைத்தளத்துக்கு ரூ.2 லட்சம் அளித்து உதவி புரிந்தார். இதே கெட்டோவின் நிதிதிரட்டல் முயற்சிக்கு விராட் கோலி மேற்கொண்ட நடவடிக்கைக்கு சாஹல் 95,000 கொடுத்திருந்தார் சாஹல்.

  தன் வீட்டில் கொரோனா பாதிப்பு இருந்த போதும் உதவி கேட்டவருக்கு உடனடியாக நன்கொடை அளித்த சாஹலை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.
  Published by:Muthukumar
  First published: