ஆல் டைம் ஐபிஎல் லெவன்: பட்லரின் அணியில் தோனிக்கு யெஸ், தவான், ரெய்னாவுக்கு நோ

ஜோஸ் பட்லர்.

ஜாஸ் பட்லரின் ஆல்டைம் லெவன் இதோ: பட்லர், ரோகித் சர்மா, விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ், தோனி, கெய்ரன் பொலார்ட், ஜடேஜா, ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், பும்ரா, மலிங்கா.

  • Share this:
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆடும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ஜாஸ் பட்லர் ஆல்டைம் ஐபிஎல் லெவன் அணியை அறிவித்துள்ளார்.

    பட்லரின் இந்த அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, எம்.எஸ்.தோனி இடம்பெற்றுள்ளனர், ஆனால் சுரேஷ் ரெய்னாவுக்கு இடமில்லை. இது ஆச்சரியமே. ஒருவேளை அடுத்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணியக் குறிவைக்கிறாரோ என்னவோ!

    கொரோனா பாதிப்பினால் ஐபிஎல் 2021 காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதற்கு முன்பாக ஜாஸ் பட்லர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக காட்டடி தர்பாரில் 124 ரன்களை விளாசியதை மறக்க முடியாது.

    இந்நிலையில் கிரிக்கெட் இணையதளப் பேட்டியில் ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியை அவர் அறிவித்தார்.

    அதில் தானும் ரோகித் சர்மாவும் தொடக்க வீரர்கள் என்றார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் விளாசிய 4வது வீரர் ரோகித் சர்மா, இவர் 5,480 ரன்களை விளாசியுள்ளார். ஜாஸ் பட்லர் 64 இன்னிங்ஸ்களில் 1,968 ரன்களை எடுத்துள்ளார்.

    இவர்களுக்கு அடுத்ததாக விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ், தோனி என்று வரிசை போகிறது. இரண்டு ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா மற்றும் பொலார்டு இடம்பெற்றுள்ளனர். இருவருமே ஐபிஎல் 2021 தொடரில் அபாரமான பார்மில் இருந்தனர். இருவருமே பீல்டிங்கில் நெருப்பு, தேவைப்படும் போது விக்கெட்டுகள் எடுத்துக் கொடுக்கும் பந்து வீச்சு, பேட்டிங்கில் இருவருமே டைனமைட்.

    பவுலர்களில் ஹர்பஜன், புவனேஷ்வர் குமார், பும்ரா மற்றும் லஷித் மலிங்கா.

    ஜாஸ் பட்லரின் ஆல்டைம் லெவன் இதோ: பட்லர், ரோகித் சர்மா, விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ், தோனி, கெய்ரன் பொலார்ட், ஜடேஜா, ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், பும்ரா, மலிங்கா.

    பட்லர் லைன் அப் பிரமாதமாக இருந்தாலும் சுரேஷ் ரெய்ன மட்டுமல்ல இன்னும் எத்தனையோ இளம் திறமைகள் இவர் அணியில் இல்லை. ஷிகர் தவான், அமித் மிஸ்ரா, டேவிட் வார்னர் உள்ளிட்டோரையும் பட்லர் கண்டுகொள்ளவில்லை.
    Published by:Muthukumar
    First published: