முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2020 | உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் ஜொலிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..!

IPL 2020 | உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் ஜொலிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..!

IPL 2020 | மும்பை - கொல்கத்தா அணிகள் தற்போது வரை 25 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது.

IPL 2020 | மும்பை - கொல்கத்தா அணிகள் தற்போது வரை 25 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது.

IPL 2020 | மும்பை - கொல்கத்தா அணிகள் தற்போது வரை 25 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஐபில் 2020 போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ஸின் ’(கே.கே.ஆர்) லோகோ மற்றும் அதிகாரப்பூர்வ ஹேஷ்டேக்கை கொண்டு ஒளிரச்செய்தது.

இதனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளது. அந்த வியக்கவைக்கும் வீடியோவில், “நாளை ஏற்பட இருக்கும் அதிரடி ஆட்டத்திற்கு, இது உதாரணம்! நாங்கள் எங்கள் வெற்றி ஆட்டத்தை நிறுத்த மாட்டோம். #KKR வண்ணங்களில் ஒளிரும்  புர்ஜ் கலீஃபாவுக்கு நன்றி. இன்று இரவு ஐக்கிய அரபு அமீரகம் சிறப்பானதொரு வரவேற்பை அளித்தது”. என குறிப்பிட்டுள்ளது.

https://twitter.com/KKRiders/status/1308467720975859712?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1308467720975859712%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fcricketnext%2Fnews%2Fipl-2020-burj-khalifa-lights-up-in-kolkata-knight-riders-colours-2901455.html

எதிர்பார்த்தபடி, கே.கே.ஆர் ரசிகர்கள் புர்ஜ் கலீஃபாவின் இந்த செயலால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரசிகர்களும் தங்களது சந்தோஷத்தை பகிர்ந்து வருகின்றனர்.

https://twitter.com/IqraParveen9/status/1308644983004631040?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1308644983004631040%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fcricketnext%2Fnews%2Fipl-2020-burj-khalifa-lights-up-in-kolkata-knight-riders-colours-2901455.html

மும்பை - கொல்கத்தா அணிகள் தற்போது வரை 25 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. அதில் இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆறு போட்டிகளில் மட்டுமே தங்கள் வெற்றியை பதிவு செய்துள்ளது. இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் :

கொல்கத்தா அணி : சுனில் நரைன், சுப்மான் கில், நிதீஷ் ராணா, ஈயோன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், நிகில் நாயக், பாட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ், சந்தீப் வாரியர், சிவம் மாவி

மும்பை அணி : ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, ஹார்டிக் பாண்டியா, கீரோன் பொல்லார்ட், குர்ணால் பாண்ட்யா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா

First published:

Tags: IPL 2020