டெத் ஓவர்களில் தெறிக்கவிடும் மும்பை பந்துவீச்சாளர்கள் - பும்ரா தரமான டெத் ஓவர் பவுலர் பாராட்டும் போல்ட்

டெத் ஓவர்களில் தெறிக்கவிடும் மும்பை பந்துவீச்சாளர்கள் - பும்ரா தரமான டெத் ஓவர் பவுலர் பாராட்டும் போல்ட்

மும்பை அணி

நேற்றைய போட்டியில் பேர்ஸ்டோ அதிரடி காட்டினாலும் சன்ரைசர்ஸ் அணியை 137 ரன்களில் சுருட்டி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது மும்பை அணி.

  • Share this:
    துப்பாக்கியில் இருந்து தெறிக்கும் தோட்டாக்களாக இருக்கிறது மும்பை அணியின் டெத் ஓவர் பவுலிங். பும்ரா, ட்ரெண்ட் போல்ட் இருவரும் கடைசி ஸ்பெலில் அட்டகாசமாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்துவதுடன் விக்கெட்டுகளையும் அள்ளுகின்றனர். ராகுல் சஹர் தனது பங்குக்கு சுழலில் எதிரணியை திணறடிக்கிறார். இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 2 வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

    முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் போராடி தோற்ற மும்பை, அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றியை சுவைத்துள்ளது. மும்பையின் பேட்டிங் யூனிட்டில் சில பிரச்னை இருக்கிறது. நேற்றைய போட்டியில் முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்திருந்த மும்பை அணியால் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பெரிய ஸ்கோருக்கு செல்ல முடியவில்லை. 20 ஓவர் முடிவில் அந்த அணியால் 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.ஆனால் மும்பையின் பந்துவீச்சு வேற லெவல்.

    நேற்றைய போட்டியில் பேர்ஸ்டோ அதிரடி காட்டினாலும் சன்ரைசர்ஸ் அணியை 137 ரன்களில் சுருட்டி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை அணி. இந்தத்தொடரில் மும்பை ஆடிய 3 போட்டிகளில் அந்த அணி எடுத்த அதிகபட்ச ரன்கள் 159 தான். வலுவான பவுலிங் யூனிட் மும்பை அணிக்கு வெற்றியை தேடித்தருகிறது. ஐபிஎல் தொடக்க போட்டியில் ஆர்.சி.பி அணிக்கு எதிராக 159 ரன்கள் தான் மும்பை அணி எடுத்தது. இந்த இலக்கையும் கடைசி பந்தில்தான் ஆர்.சி.பி-ஆல் சேஸ் செய்ய முடிந்தது. டிவில்லியர்ஸ் அதிரடியால் ஆர்.சி.பி முதல் போட்டியில் தப்பிப்பிழைத்தது.

    பேர்ஸ்டோ


    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 2-வது போட்டியில் மும்பை அணி 152 ரன்களே எடுத்தது. எதிரணியை 142 ரன்களில் சுருட்டினர் மும்பை பந்துவீச்சாளர்கள். நேற்றைய போட்டியில் 150 தான் அடிக்க முடிந்தது. பவர்ப்ளேவில் பேர்ஸ்டோ ஒரு காட்டு காட்டிய நிலையிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 137 ரன்களில் சுருட்டினர். அதுவும் கடைசி ஒவரில் போல்ட் வீசிய முதல் பந்து துப்பாக்கியில் இருந்து தெறிக்கும் தோட்டாக்களாக ஸ்டெம்புகளை பதம் பார்த்தது. நேற்றைய போட்டியில் 4 ஓவரை வீசிய பும்ரா 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.ட்ரெண்ட் போல்ட் 28 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். தீபக் சஹர் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

    பும்ராவின் பந்துவீச்சை புகழ்ந்து பேசியுள்ள ட்ரெண்ட் போல்ட், ‘ பும்ரா இதுபோன்று விளையாடுவதை பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. அந்த ஸ்பெல் முழுவதும் தான் பந்துவீச்சில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அதுவும் டெத் ஓவர்களில் என்னுடைய பார்வையில் உலக அளவில் மிகவும் சிறப்பான டெத் ஓவர் பந்துவீச்சாளர்களில் பும்ராவும் ஒருவர். பும்ரா என்னுடைய பணியை மிகவும் எளிதாக்கியுள்ளார்” என பாராட்டு தெரிவித்துள்ளார்.
    Published by:Ramprasath H
    First published: