Home /News /sports /

ரெய்னாவுக்கு வாய்ப்பில்லை, இலங்கை வீரருக்கு வாய்ப்பா? #Boycott_ChennaiSuperKings ட்விட்டரில் ட்ரெண்ட்

ரெய்னாவுக்கு வாய்ப்பில்லை, இலங்கை வீரருக்கு வாய்ப்பா? #Boycott_ChennaiSuperKings ட்விட்டரில் ட்ரெண்ட்

 #Boycott_ChennaiSuperKings ட்விட்டரில் ரெண்ட்

#Boycott_ChennaiSuperKings ட்விட்டரில் ரெண்ட்

#Boycott_ChennaiSuperKings | ஐபிஎல் மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை அணியில் எடுக்காமல் இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனாவை எடுத்தற்காக சிஎஸ்கே அணியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    ஐபிஎல் 2022 தொடருக்கு முன் மெகா ஏலம் பெங்களுருவில் சனி மற்றும் ஞாயிறு (பிப்பரவரி 12, 13) ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் தங்களுக்கான வீரர்களை போட்டி போட்டு கொண்டு ஏலத்தில் எடுத்தது. சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்கும் வீரர்கள் மீதும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    சிஎஸ்கே முதல் நாள் ஏலத்தில் பழைய வீரர்களையே ஏலத்தில் எடுத்து வந்தது. அம்பாதி ராயுடு, பிராவோ, ராபின் உத்தப்பா, தீபக் சஹர் என பழைய வீரர்களை குறிவைத்து ஏலத்தில் எடுத்தது. ஆனால் இந்த மெகா ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சிஎஸ்கேவின் வெற்றிக்கு ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்தவரும் மிஸ்டர் ஐபிஎல் என்று பெயர் எடுத்த சுரேஷ் ரெய்னா இந்த ஏலத்தில் விலைப்போகவில்லை.

    சிஎஸ்கே உள்ளிட்ட எந்த அணியும் சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. மேலும் 2-வது சுற்றிலும் அவரது பெயர் இடம்பெறாமல் இருந்தது ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக ரன்கள் எடுத்தவர்களில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். ப்ளே ஆஃப் சுற்றுகளில் பலமுறை சிஎஸ்கே அணிக்கு வெற்றிகளை பெற்று தந்தவர்.

    ஆனால் சுரேஷ் ரெய்னாவை இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணியும் வாங்கவில்லை என்பதை சிஸ்கே ரசிகர்களால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்காமல் இலங்கை வீரர் மஹீஷ் தீக்‌ஷனா என்பவரை ரூ.70 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது ரசிகர்களிடம் வெறுப்பை சாம்பாதித்துள்ளது.

    Also Read : எஸ்கே-வுக்கு கிடைத்து விட்டார் இன்னொரு மைக் ஹஸ்ஸி

    சென்னை அணியில் ஏற்கனவே இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் விளையாடி வந்த போது சிஎஸ்கே அணிக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவரை சிஎஸ்கே தனது அணியிலிருந்து விடுத்ததால் அப்போது அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. மேலும் கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் இலங்கை வீரர்கள் விளையாட தடை விதிக்க வேண்டுமென பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    ஆனால் தற்போது மீண்டும் சிஎஸ்கே இலங்கை அணி வீரரை ஏலத்தில் எடுத்துள்ளதாலும் ரெய்னாவிற்கு வாய்ப்பு வழங்காத காரணத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர். இதையடுத்து #Boycott_ChennaiSuperKings என்ற ஹேஸ்டேகை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.











    ட்விட்டரில் ரெய்னாவுக்கு ஆதரவாகவும், இலங்கை வீரருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் #Boycott_ChennaiSuperKings என்ற ஹேஸ்டேகை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி