ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இலங்கை வீரரை சென்னை அணியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு.. சிஎஸ்கேவை புறக்கணிக்கும் போராட்டம் (Boycott Chennai Super Kings) தொடங்கியது

இலங்கை வீரரை சென்னை அணியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு.. சிஎஸ்கேவை புறக்கணிக்கும் போராட்டம் (Boycott Chennai Super Kings) தொடங்கியது

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

சிஎஸ்கேவுக்கு உலகெங்கும் இருக்கும் தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #Boycott_ChennaiSuperKings என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்வதற்கு காரணம் இலங்கை வீரரான மஹீத் தீக்‌ஷனா

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எந்த அணிக்கும் இல்லாத ஆதரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கிறது. தல தோனியை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் சென்னை ரசிகர்கள். மகுடம் சூடாத மன்னனாக தான் சென்னை ரசிகர்கள் தோனியை கருதுகின்றனர். இந்த ஐபிஎல் ஆக்‌ஷன் சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் வரவழைத்துள்ளது. 2018-ல் கம்பேக் கொடுத்த சென்னை அணியை அங்கிள்ஸ் ஆர்மி என மற்ற அணி ரசிகர்கள் வறுத்தெடுத்தபோதும்  ‘OLD IS GOLD’ என சப்போர்ட் செய்த சென்னை ரசிகர்களால் இந்த ஆக்‌ஷனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

டூப்பிள்சிஸ் எடுக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த சிஎஸ்கே நிர்வாகம் அடுத்து சிஎஸ்கே-வின் முதுகெலும்பாக இருந்த ரெய்னாவை ஏலத்தில் கண்டுக்கொள்ளாததும் அவரை எந்த அணியும் வாங்காததும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேவேளையில் இலங்கை வீரர் மஹீத் தீக்‌ஷனாவை ரூ.70 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது தமிழக ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காதது ஏன்? சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பதில்

சிஎஸ்கே-வுக்கு எதிராக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

இதன் ஒட்டுமொத்த விளைவாக #Boycott_ChennaiSuperKings என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி தங்களது எதிர்ப்பை சென்னை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் ஆக்‌ஷன் தொடங்கியதும் சிஎஸ்கே, yellow army என தெறிக்கவிடும் சிஎஸ்கே ரசிகர்கள் இந்தமுறை சென்னை சூப்பர் கிங்ஸை புறக்கணிக்கிறோம் என பதிவிட்டு வருவது கவனிக்கத்தக்கது. இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனதற்கு இரண்டு பெயர்கள் முக்கிய காரணம் சுரேஷ் ரெய்னா மற்றும் இலங்கை வீரர் மஹீத் தீக்‌ஷனா.

ரெய்னாவுக்காக கொந்தளிக்கும் ரசிகர்கள்

சென்னை ரசிகர்களால் சின்ன தல என செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே கழட்டிவிட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இனி வாய்ப்பே இல்லை என கைவிட்ட போன பல மேட்ச்களில் டெய்ல் எண்ட் பேட்ஸ்மேன்களை வைத்து சிங்கிளாக எடுத்து இன்னிங்ஸை கட்டமைத்து.. பவுண்டரியும்… சிக்ஸருமாக தெறிக்கவிட்டு பல மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியவர் ரெய்னா.. சிஎஸ்கேவுக்காக பல மிரட்டலான இன்னிங்ஸை ஆடியவர். ரெய்னாவை சென்னை நிர்வாகம் புறக்கணித்ததை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புஜாராவை Showoff-க்காக வைத்திருக்கும் சென்னை ஏன் ரெய்னாவை அடிப்படை விலைக்கு கூட எடுக்கவில்லை என கொந்தளிக்கிறார்கள்.

இலங்கை வீரர் மஹீத் தீக்‌ஷனா பிரச்னை

சிஎஸ்கேவுக்கு உலகெங்கும் இருக்கும் தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #Boycott_ChennaiSuperKings என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்வதற்கு காரணம் இலங்கை வீரரான மஹீத் தீக்‌ஷனா. இலங்கை தமிழர் பிரச்னை காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய இலங்கை வீரரான முத்தையா முரளிதரன் சிஎஸ்கே அணியில் ஆடியதற்காக கடந்த காலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது அனைவருக்கும் நினைவு இருக்கும். இத்தனைக்கும் முத்தையா முரளிதரன் இலங்கை தமிழர் ஸ்டார் அந்தஸ்து உள்ள கிரிக்கெட் வீரர்.

2013-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தமிழகத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விளையாட தடை விதிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் இலங்கை விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி நடுவர்கள், அதிகாரிகள், சப்போர்ட்டிங் ஸ்டாஃப் என இலங்கையை சேர்ந்த யாரும் பங்கேற்க மாட்டார்கள் என ஐபிஎல் நிர்வாகம் உறுதியளித்தால் மட்டுமே சென்னையில்  ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிப்போம் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இலங்கை அணிக்காக விளையாடி வரும் மஹீத் தீக்‌ஷனாவை சிஎஸ்கே எடுத்தது தமிழக ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் மட்டும் இந்தியாவுக்கு எதிரியல்ல. இலங்கை தமிழர்களை வஞ்சித்த, தமிழக மீனவர்களை தினந்தோறும் துன்புறுத்தும் இலங்கையும் இந்தியாவுக்கு எதிரிதான். பாகிஸ்தான் வீரர்களை நாடு விரும்பவில்லை என்பது போல் இலங்கை வீரர்களை தமிழர்கள் விரும்பவில்லை என பலரும் ட்விட்டரில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ள இளம்வீரர் இலங்கை ராணுவம் அணிக்காக விளையாடியவர். உடனடியாக இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையீட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என சில ரசிகர்கள் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காவிரி விவகாரத்தின் போது சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது சில அரசியல் அமைப்புகள்  ‘சோற்றை விட ஸ்கோர் முக்கியமா’ என சிஎஸ்கே ரசிகர்கள் மீது 2018-ல் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் அரங்கேறியது. ஆனால் இந்த முறை சென்னை ரசிகர்களே இலங்கை வீரரை அணியில் சேர்த்ததற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Also Read: 2022-ல் தோனி விளையாடலேன்னா நானும் ஆடமாட்டேன் - வைரலாகும் ரெய்னாவின் பழைய பேட்டி

இலங்கை வீரர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டு சென்னையில் போட்டிகளை நடத்தினால் ரசிகர்களே போட்டிகளை புறக்கணிக்க வாய்ப்புகள் உள்ளது. நியூட்டனின் மூன்றாம் விதியான the law of action and reaction போல் ஐபிஎல் ஆக்‌ஷனில் சிஎஸ்கே நிர்வாகம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்ததால் ரசிகர்கள் அதற்கு எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

First published:

Tags: Chennai Super Kings, CSK, Dhoni, MS Dhoni, Raina, Suresh Raina