'உங்கள் கைகளில் ரத்தம்': ஆஸ்திரேலிய பிரதமரை சாடிய கிரிக்கெட் வர்ணணையாளர்!

'உங்கள் கைகளில் ரத்தம்': ஆஸ்திரேலிய பிரதமரை சாடிய கிரிக்கெட் வர்ணணையாளர்!

மைக்கேல் ஸ்லேட்டர்

ஐபிஎல் தொடருக்காக இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வர்ணணையாளர் மைக்கேல் ஸ்லேட்டர் ஆஸ்திரேலிய அரசின் முடிவுக்காக ஆஸி பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.

  • Share this:
சொந்த நாட்டவர் உட்ப்ட இந்தியாவிலிருந்து யாரும் ஆஸ்திரேலியாவிற்கு திரும்பக் கூடாது அப்படி உத்தரவை மீறினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற ஆஸ்திரேலிய அரசின் உத்தரவை கண்டித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வர்ணணையாளர் ஒருவர் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனை கடுமையாக சாடியுள்ளார்.

கொரோனா பரவலின் 2வது அலை இந்தியாவை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவதும், பலி எண்ணிக்கை 4,000ஐ நெருங்கியுள்ளதும் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு பயணத் தடை விதித்துள்ளது. அதாவது இந்தியாவிலிருந்து தங்கள் நாடுகளுக்கும், தங்கள் நாட்டில் இருந்து இந்தியாவிற்குமான நேரடி விமானப் சேவையை ரத்து செய்துள்ளது.

அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவும் இந்தியாவுக்கு நேரடி விமான சேவையை துண்டித்துள்ளது. இருப்பினும் வேறு நாடுகளின் விமான வழித்தடத்தை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து நேரடியாக இல்லாமல் பிற நாடுகள் வழியாக ஆஸ்திரேலியர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் கூட இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜப்மா, கனே ரிச்சர்ட்சன் ஆகியோர் இந்தியாவிலிருந்து நேரடியாக இல்லாமல் வேறு நாட்டின் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பியதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்தும் இந்தியாவுக்கு 14 நாட்களுக்குள் சென்று திரும்பிய யாரும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யக் கூடாது என அந்நாடு அறிவித்துள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கள் சொந்த குடிமக்களே ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது, சிறை தண்டனை அல்லது $66,000 என்ற கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் இந்த புதிய விதிமுறை நாளை மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஆஸ்திரேலிய அரசின் இம்முடிவு வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் ஆஸ்திரேலியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து சொந்த நாடு திரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை என எச்சரிக்கை!


இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்களும், பிரெட் லீ போன்ற கிரிக்கெட் வர்ணணையாளர்கள் உட்பட வேறு பிற விளையாட்டு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

ஐபிஎல் தொடருக்காக இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வர்ணணையாளர் மைக்கேல் ஸ்லேட்டர் ஆஸ்திரேலிய அரசின் முடிவுக்காக ஆஸி பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.

மைக்கேல் ஸ்லேட்டர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பு குறித்து நம் அரசு அக்கறை கொள்ளுமானால், எங்களை நாட்டிற்கு திரும்ப அனுமதித்திருக்க வேண்டும். இது ஒரு அவமானம்!! உங்கள் கைகளில் இரத்தம் இருக்கிறது பிரதமர் அவர்களே.எங்களை எப்படி இப்படி விதத்தில் நடத்துகிறீர்கள்? நீங்கள் எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட முறையை கையாளுகிறீர்கள்? ஐ.பி.எல். இல் பணியாற்ற எனக்கு அரசாங்க அனுமதி இருந்தது, ஆனால் இப்போது அரசாங்கம் என்னை புறக்கணித்துள்ளது” இவ்வாறு ஸ்லேட்டர் தெரிவித்துள்ளார்.
Published by:Arun
First published: