ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரூ.16.25 கோடிக்கு சிஎஸ்கே ஏலத்தில் எடுத்த உடன் பென் ஸ்டோக்ஸ் பதிவிட்ட ட்வீட்

ரூ.16.25 கோடிக்கு சிஎஸ்கே ஏலத்தில் எடுத்த உடன் பென் ஸ்டோக்ஸ் பதிவிட்ட ட்வீட்

சிஎஸ்கே ஏலத்தில் எடுத்த உடன் பென் ஸ்டோக்ஸ் பதிவிட்ட ட்வீட்

சிஎஸ்கே ஏலத்தில் எடுத்த உடன் பென் ஸ்டோக்ஸ் பதிவிட்ட ட்வீட்

IPL Auction 2023 | இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை் ரூ.16.25 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஐபிஎல் ஏலம் (IPL 2023 Auction) கொச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் உள்ளிட்ட 10 அணிகளுக்கு தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரும் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருந்த சாம் கரனுன்கு (Sam Curran) இந்த ஏலத்தில் மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. நடந்து முடிந்த டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற முக்கிய வீரராக இருந்தவர் சாம் கரன். டி20 உலகக்கோப்பை தொடரில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்திய சாம் கரன் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

சாம் கரனை ஏலத்தில் எடுக்க முதலில் மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகள் போட்டியிட்டன. ஏலம் 14 கோடிக்கு மேல் சென்றதும் சிஎஸ்கே விலகியது. பின் பஞ்சாப் அணியும் மும்பையும் போட்டியின. இறுதியாக சாம் கரனை பஞ்சாப் அணி ரூ.18.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை சாம் கரன் படைத்துள்ளார்.

Also Read : 18 வயது வீரரை ஏலத்தில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்… யார் இந்த நிஷாந்த் சிந்து?

நடப்பு ஐபிஎல் தொடரில் சாம் கரனுக்கு அடுத்தப்படியாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரினை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.17.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவர்கள் இருவருக்கும் அடுத்தப்படியாக பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) ரூ.16.25 கோடிக்கு ஏலம் போனார். அவரை ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே. சிஎஸ்கே அணிக்கு ரவீந்திர ஜடேஜாவுக்கு அடுத்தப்படியாக சிறந்த ஆல் ரவுண்டராக பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றுள்ளார்.

இதனிடையே ரூ.16.25 கோடிக்கு சிஎஸ்கே (Chennai Super Kings) ஏலத்தில் எடுத்த உடன் பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணியின் ஜெர்சி நிறமான மஞ்சள் நிறத்தை பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் சிஎஸ்கே அணியை பின்தொடர்ந்தும் உள்ளார். சிஎஸ்கே ரசிகர்கள் பென் ஸ்டோக்ஸ்க்கு ட்விட்டரில் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

நடப்பு ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி பென் ஸ்டோக்ஸை தவிர ரஹானே, கைல் ஜேமிசன், நிஷாந்த் சிந்து, ஷேக் ரஷித் ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது.

ஏலம் தொடங்கியதும் முதல் வீரராக ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டனான வில்லியம்சன் அறிவிக்கப்பட்டார். இவருக்கு ரூ. 2 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அவரை வாங்க அணிகள் அதிகம் ஆர்வம் காட்டவிலை. அவரை கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

அடுத்த வீரராக இங்கிலாந்து அணியின் ஹாரி பரூக்கை ஏலத்தில் எடுக்க போட்டி நிலவியது. ஹாரியை ஏலத்தில் எடுக்க ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் போட்டியிட்டன. இறுதியில் ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஹேரியை ஏலத்தில் எடுத்தது.

First published:

Tags: Ben stokes, CSK, IPL 2023, IPL Auction