ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இனி ஐபிஎல் ஆட்டங்கள் அனல் பறக்கும்.. அடுத்தாண்டு இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய விதிமுறையை அமல்படுத்த பிசிசிஐ முடிவு?

இனி ஐபிஎல் ஆட்டங்கள் அனல் பறக்கும்.. அடுத்தாண்டு இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய விதிமுறையை அமல்படுத்த பிசிசிஐ முடிவு?

மாதிரி படம்

மாதிரி படம்

ஐபிஎல் போட்டிகளில் 'இம்பேக்ட் பிளேயர்' என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய முறை மூலமாக போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே விளையாடும் 11 வீரர்களில் ஒருவரை மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 14-வது ஓவர் முடியும் முன்பாக அணியின் ஒரு வீரரை மாற்றிக் கொள்ள முடியும் எனவும், அவர் பேட்டிங், பவுலிங் செய்யலாம் எனவும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.

அந்த இம்பேக்ட் வீரரை பேட்ஸ்மேனுக்கு பவுலராகவோ, இல்லை பவுலருக்கு பேட்ஸ்மேனாகவோ கூட மாற்றலாம். இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. இதே போன்று ஏற்கனவே ஆட்டமிழந்த பேட்ஸ்மேனுக்கு பதிலாக புது பேட்ஸ்மேனை 14வது ஓவர் முடிவதற்குள் கொண்டு வரலாம். இதே போன்று ஒரு வீரர் சில ஓவர் வீசிய பிறகு, அவர் பந்துவீச்சு எடுப்படவில்லை என தெரிந்தால் 14 வது ஓவருக்கு முன் அவரை மாற்றி வேறு ஒரு வீரரை இம்பேக்ட் பிளேயிராக மாற்றலாம்.

11 வீரர்களைக் கொண்ட விளையாடும் அணியை அறிவிக்கும் போதே, மாற்று வீரரையும் அறிவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கால்பந்து போட்டிகளில் மாற்று வீரரை களமிறக்குவது போல, கிரிக்கெட் போட்டிகளிலும் மாற்று வீரரை முழுமையாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் இந்திய கொடியுடன் போஸ் கொடுக்கும் அர்ஜெண்டினா கால்பந்து ரசிகை.. காரணம் இதுதான்!

 இந்த நடைமுறை வரும் 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில் பிசிசிஐ நடத்தும் பிரதான டி20 தொடர்களில் ஒன்றான சையது முஸ்தாக் அலி தொடரில் முதல் முறையாக இம்பேக்ட் பிளேயர் விதி அமலுக்கு வந்தது குறிப்பிடதக்கது.

First published:

Tags: BCCI, IPL