ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

2023-ல் மகளிர் ஐபிஎல் தொடர் - பிசிசிஐ தீவிரம்

2023-ல் மகளிர் ஐபிஎல் தொடர் - பிசிசிஐ தீவிரம்

மகளிர் ஐபிஎல் தொடர்

மகளிர் ஐபிஎல் தொடர்

2023 பிப்ரவரியில் நடைபெறும் மகளிர் டி-20 உலகக் கோப்பைக்கு பின்னர், மார்ச் மாதம் இந்தியாவில் மகளிர் ஐபிஎல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  2023 மார்ச் மாதம் மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு, பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆடவர் போன்று, மகளிருக்கும் ஐபிஎல் போட்டி நடத்த நீண்ட காலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்நிலையில், 2023 பிப்ரவரியில் நடைபெறும் மகளிர் டி-20 உலகக் கோப்பைக்கு பின்னர், மார்ச் மாதம் இந்தியாவில் மகளிர் ஐபிஎல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இதில், மொத்தம் 5 அணிகள் பங்கேற்று, மற்ற அணிகளுடன் ரவுன்ட்-ராபின் முறையில் தலா இரு போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.   லீக் முடிவில் முதல் இடம் பிடிக்கும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். அதில் வெற்றிபெறும் அணி இறுதிக்குள் நுழையும்.

  மகளிர் ஆசியகோப்பை : ஒரு ரன்னில் இறுதி போட்டி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்.. இலங்கை த்ரில் வெற்றி

  அதன்படி 20 லீக் உட்பட மொத்தம் 22 போட்டிகளை நடத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.  மேலும், ஒவ்வொரு அணியும் 18 வீராங்கனைகளை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். இதில், அதிகபட்சமாக 6 வெளிநாட்டு வீராங்கனைகள் அங்கம் வகிக்கலாம்.  மேலும், ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் பங்கேற்கலாம்.  பிசிசிஐ-யின் இந்த முயற்சியால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: IPL