ஐபிஎல் பாதியில் நின்றால் பிசிசிஐ-க்கு ரூ.2000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று தலைவர் சவுரவ் கங்குலி ஏற்கெனவே தெரிவித்திருந்தார், ஆனால் நாட்டில் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. இறப்பு விகிதமும் அதிகரித்தபடியேதான் இருக்கிறதே தவிர குறைந்ததாகத் தெரியவில்லை.
இந்நிலையில் பயோபபுளையும் மீறி ஐபிஎல் வீரர்களை கொரோனா பாதித்தது, பயிற்சியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. சஹா, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட வீரர்கள் இப்போதுதான் மீண்டுள்ளனர். ஆனால் என்ன செய்வது பணம்படுத்தும் பாடு, ஐபிஎல் தொடரின் மீதமுள்ள 31 போட்டிகளையும் எது எக்கேடு கெட்டால் என்ன நடத்தி விடுவோம் என்று பிசிசிஐ தீவிரமாக அலைகிறது.
இதற்காக ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட்கள் கொண்ட தொடரை ஒருவாரம் முன் கூட்டியே நடத்த வேண்டும் என்று பிசிசிஐ இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
பிசிசிஐ அதிகாரிகள் யாரும் இதபற்றி தெரிவிக்கவில்லை என்றாலும் தி டைம்ஸ் பத்திரிகையில் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆர்த்தர்டன் இது பற்றி கூறியுள்ளார்.
ஜூன் 18 முதல் 22 வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுதாம்ப்டனில் நடைபெறுகிறது. அதன் பிறகு இங்கிலாந்து தொடருக்கு 6 வாரங்கள் இடைவெளி உள்ளது ,இந்த இடைவெளியைக் குறைத்து டெஸ்ட் தொடரை முன் கூட்டிய தேதிக்கு மாற்றி விட்டால் செப்டம்பர் மாதத்தில் கிடைக்கும் இடைவெளியில் ஐபிஎல் தொடரை நடத்தி விடலாம் என்று பிசிசிஐ கருதுகிறது. ஐபிஎல் மீதிப் போட்டிகள் இங்கிலாந்திலோ, யுஏஇ-யிலோ நடத்தப்படலாம்.
இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பிற போட்டி அட்டவணைகள், பிற நாட்டு கிரிக்கெட் தொடர்கள் இதற்காக டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்கப்பட்டுள்ள நிலையில் பிசிசிஐ-யின் இந்தக் கோரிக்கையினால் பாதிக்கப்படும் என்று ஆர்த்தர்டன் எழுதியுள்ளார். உதாரணமாக இந்திய-இங்கிலாந்து 5வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 10-14ல் நடைபெறுகிறது, இதற்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India Vs England, IPL 2021, Test series