Home /News /sports /

ஐபிஎல் தொடரிலிருந்து விலகினால்... - வீரர்கள் மீது கெடுபிடியை அதிகரிக்கும் பிசிசிஐ

ஐபிஎல் தொடரிலிருந்து விலகினால்... - வீரர்கள் மீது கெடுபிடியை அதிகரிக்கும் பிசிசிஐ

டாடா ஐபிஎல்

டாடா ஐபிஎல்

ஐபிஎல் 2022 தொடரில் ஏலம் எடுத்த பிறகு இங்கிலாந்து வீரர்கள் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் விலகினர். பயோ பபுள், என்ற கொரோனா பாதுகாப்பு வலையத்தைக் காரணம் காட்டி விலகினர். இதனையடுத்து சில அணி உரிமையாளர்கள் வீரர்கள் திடீர் திடீரென விலகுவது குறித்த கவலைகளை எழுப்ப பிசிசிஐ தற்போது அதைத்தடுக்க புதிய விதிமுறைகளை ஏற்படுத்தி கெடுபிடிகளை அதிகரிக்கவுள்ளது. 

மேலும் படிக்கவும் ...

    ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் தங்கள் பெயர்களை திரும்பப் பெறும் போக்கு அதிகரித்து வருவதைக் கண்டு, ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தின் போது பல உரிமையாளர்களால் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது. லீக்கின் முக்கியமான பங்குதாரர்களான உரிமையாளர்களுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழு  அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது.

    அவர்கள் பல திட்டமிடலுக்குப் பிறகு ஒரு வீரரை ஏலம் எடுக்கின்றனர். . ஒரு வீரர் வெளியேறினால் அவர்களின் கணக்கீடுகள் மோசமாகிவிடும், அதுவும் மெலிதான காரணங்களுக்காக ஒரு வீரர் திடீரென அணியில் வாங்கப்பட்ட பிறகு வெளியேறுவது சிக்கலை அதிகரிக்கிறது  என்று GC உறுப்பினர் ஒருவர் கூறியதை ஆங்கில ஊடகம் ஒன்று மேற்கொள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

    எவ்வாறாயினும், காயங்கள் உட்பட சரியான காரணங்களைக் கொண்டவர்களைத் தண்டிப்பதைத் தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு வீரரின் காரண அடிப்படையில் வீரர்களை இந்த புதிய கொள்கை கையாளும்.

    ஐபிஎல் 2022 தொடங்குவதற்கு முன்பு, இங்கிலாந்து பேட்டர் ஜேசன் ராய் சீசனில் இருந்து விலகியதால், அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் பாதிக்கப்பட்டது. ராய் அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடியில் வாங்கப்பட்டார்.

    “எனது குடும்பத்துடன் தரமான நேரத்தைச் செலவிடுவது சரியானது என்று நான் உணர்கிறேன். அதே போல் அடுத்த இரண்டு மாதங்களில் என்னையும் எனது ஆட்டத்திற்காகவும் நேரத்தைச் செலவிடுவேன், இது மிகவும் பிஸியான ஆண்டாக அமையும்" என்று ராய் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

    மற்றொரு ஆங்கிலேயர் அலெக்ஸ் ஹேல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ. 1.5 கோடிக்கு வாங்கப்பட்டார், திரும்பப் பெறுவதற்கு பயோ-பபிள் சோர்வை காரணம் காட்டினார். இது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மேம்பட்ட அடிமை சாசனமாக மாறப் போகிறது என்று கிரிக்கெட் விமர்சகர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: BCCI, IPL, IPL 2022

    அடுத்த செய்தி