Home /News /sports /

ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையை சீசனுக்கு 94 ஆக அதிகரிக்கப் பரிசீலனை

ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையை சீசனுக்கு 94 ஆக அதிகரிக்கப் பரிசீலனை

ஐபிஎல் 2022

ஐபிஎல் 2022

2022-ல் மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெற்றன. இதனை 2023 முதல் 84 போட்டிகளாக மாற்ற பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அடுத்த 2023-27 ஆண்டு சுழற்சியில் ஐபிஎல் ஆட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து சூசகமாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
    ஐபிஎல் போட்டிகள் ஏற்கெனவே 10 அணிகளாக அதிகரிக்கப்பட்டு போட்டி எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு நீண்ட நாட்கள் நடைபெற்று ஒரு விதமான மனச்சோர்வையும் வீரர்களிடத்தில் ஆர்வக்குறைவையும், பார்வையாளர்களிடத்தில் ஆர்வமின்மையையும் ஏற்படுத்தி விடுகிறது என்று எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில் அந்தத் தொடரை குறுக்கி ட்ரிம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் போட்டிகள் எண்ணிக்கையை அதிகரிப்பார்கள் போல் தெரிகிறது.

    2022-ல் மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெற்றன. இதனை 2023 முதல் 84 போட்டிகளாக மாற்ற பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அடுத்த 2023-27 ஆண்டு சுழற்சியில் ஐபிஎல் ஆட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து சூசகமாக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு இரண்டு சீசன்களுக்குப் பிறகும் படிப்படியாக போட்டிகளை அதிகப்படுத்தவும் திட்டங்களை வைத்துள்ளது.

    முதல் இரண்டு ஆண்டுகளில் 2023 மற்றும் 2024-ல் 74 ஆட்டங்கள் இருக்கும் என அறியப்பட்டாலும், அடுத்த ஓரிரு ஆண்டுகளில், கேம்களின் எண்ணிக்கை 84 ஆக இருக்கும். சுழற்சியின் ஐந்தாவது மற்றும் கடைசி சீசனில், இது 94 ஆக இருக்கலாம்.

    ஒவ்வொரு அணியும் அதன் குழுவில் உள்ள மற்ற நான்கு அணிகளுடன் இரண்டு முறை விளையாடுகிறது, மற்ற குழுவின் நான்கு அணிகளுடன் ஒரு முறை மற்றும் மீதமுள்ள ஒரு அணிக்கு எதிராக இரண்டு முறை விளையாடுகிறது. நான்கு பிளேஆஃப்கள் கூட்டினால் 74 போட்டிகள் வரும். 84 ஆக இருந்தால், ஒருவரின் சொந்தக் குழுவில் ஒவ்வொரு அணிக்கும் எதிராக இரண்டு முறையும், மற்ற குழுவில் இருவருக்கு எதிராக இரண்டு முறையும், மீதமுள்ள மூன்று அணிகளுக்கு எதிராக ஒரு முறையும் அமையும்.

    ஏற்கெனவே வீரர்கள் களைப்பாகி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுகளை அறிவித்து வரும் நிலையில் தேசியக் கிரிக்கெட்ட்டின் பெரு வடிவமான டெஸ்ட் போட்டிகள் அழிந்து வரும் நிலையில் இதை அனுமதித்தால் உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல கிரிக்கெட்டுக்கே பெரிய டேஞ்சர் ஆகிவிடும் என்று உண்மையான கிரிக்கெட்டுக்கான ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: BCCI, IPL

    அடுத்த செய்தி