Home /News /sports /

ஐபிஎல் 2022 தொடர் இந்தியாவில் நடைபெறுவது சந்தேகம்- வேறு நாட்டைத் தேடும் பிசிசிஐ

ஐபிஎல் 2022 தொடர் இந்தியாவில் நடைபெறுவது சந்தேகம்- வேறு நாட்டைத் தேடும் பிசிசிஐ

ஐபிஎல்

ஐபிஎல்

இந்தியன் பிரீமியர் லீக்கின் 2022-ம் ஆண்டின் தொடர் கொரோனா வைரஸ் மூன்றாம் அலையை அடுத்து தென்னாப்பிரிக்கா அல்லது இலங்கையில் விளையாடப்படலாம் என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இந்தியன் பிரீமியர் லீக்கின் 2022-ம் ஆண்டின் தொடர் கொரோனா வைரஸ் மூன்றாம் அலையை அடுத்து தென்னாப்பிரிக்கா அல்லது இலங்கையில் விளையாடப்படலாம் என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருகின்றன, வரும் மாதங்களில் நிலைமை மேம்படவில்லை என்றால், தென்னாப்பிரிக்காவிற்கு ஐபிஎல் தொடரை மாற்ற பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அங்கு டீம் இந்தியா தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது.

    தற்போதைய சுற்றுப்பயணத்தில் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் ஏற்பாடுகளில் பிசிசிஐ மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளது, எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் தென் ஆப்பிரிக்காவை ஐபிஎல் நடத்த ஒரு சாத்தியமாக பார்க்கிறது. முன்னதாக, 2009ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தேர்தல் காரணமாக தென்னாப்பிரிக்கா ஐபிஎல் டி20 லீக் போட்டிகளை நடத்தியது.

    இதற்கிடையில், பிசிசிஐ ஐபில் தொடரை நடத்துவதற்கான பிளான் பி இன் ஒரு பகுதியாக இலங்கையும் இருப்பதாக தெரிகிறது. லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகளைச் சேர்ப்பதன் மூலம் வரவிருக்கும் சீசன் மிக நீண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த இரண்டு சீசன்களில் (2021-ல் பகுதியளவு), கோவிட்-19 தொற்றுகள் அதிகரித்த பிறகு, ஐபிஎல் போட்டியை யுஏஇ-க்கு மாற்றியது பிசிசிஐ. இருப்பினும், வாரியம் இந்த முறை ஐபிஎல் நடத்த புதிய நாட்டைத் தேடுகிறது.

    இன்னொரு ஆங்கில ஊடகத்தின் முந்தைய அறிக்கையின்படி, மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் வான்கடே ஸ்டேடியம், நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியம் மற்றும் அருகிலுள்ள கஹுஞ்சேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம் ஆகிய நான்கு இடங்களில் முழு லீக்கையும் மகாராஷ்டிராவில் நடத்த வாரியம் திட்டமிட்டது. ஆனால் அதிகரித்து வரும் கொரோனா பாசிட்டிவிட்டி விகிதம் காரணமாக ரஞ்சி டிராபி மற்றும் மகளிர் டி20 லீக் ஒத்திவைக்கப்பட்டது. 19 வயதுக்குட்பட்ட உள்நாட்டு கூச் பெகார் டிராபி நிறுத்தப்பட்டது, இந்நிலையில் பிசிசிஐ ஐபிஎல் 2022 அட்டவணையை மீண்டும் தயாரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    சமீபத்தில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ஐபிஎல்லின் அடுத்த தொடர் இந்தியாவில் நடைபெறுவதை உறுதி செய்ய கிரிக்கெட் வாரியம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று கூறினார். அதிகாரப்பூர்வ தேதிகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், ஐபிஎல் 2022 ஏப்ரல் தொடக்கத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏலம் பிப்ரவரி தொடக்கத்தில் நடைபெறலாம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022

    அடுத்த செய்தி