ஐபிஎல் மீடியா உரிமைகளுக்கான ஏலம் சுமார் ரூ.45,000 கோடி வருவாயை உறுதி செய்ததையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), முன்னாள் வீரர்கள் மற்றும் நடுவர்களுக்கான ஓய்வூதியத்தை அதிகப்படுத்தியுள்ளது.
ஜூன் 1ம் தேதி முதல் இந்த ஓய்வூதிய உயர்வு அதிகரித்துள்ளது, அதாவது ரூ.15,000, ரூ.22,500, ரூ.30,000, ரூ.37,500, ரூ.50,000 பென்ஷன் ஸ்லாப் தொகைகள் முறையே ரூ.30,000, ரூ. 45,000, ரூ.52,500, ரூ.60,000 மற்றும் ரூ. 70,000. என்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதை செய்தி அறிக்கை மூலம் தெரிவித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, “"வீரர்கள் உயிர்நாடியாக இருக்கிறார்கள், ஒரு வாரியமாக, அவர்கள் விளையாடும் நாட்கள் முடிந்தவுடன் அவர்களுக்கு பக்கபலமாக இருப்பது எங்கள் கடமை” என்றார்.
செயலாளர் ஜெய் ஷா கூறும்போது, “எங்கள் கிரிக்கெட் வீரர்களின் நலன், அது முன்னாள் வீரர்கள், தற்போதைய வீரர்கல் என்று யாராக இருந்தாலும், அவர்களின் நலன்களுக்கு முதன்மையான முன்னுரிமையாகும், ஆகவே ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது அந்த திசையில் ஒரு நகர்வாகும்." என்றார்
2008 இல், ஐபிஎல் தொடக்க சீசனில், போட்டியின் ஊடக உரிமை மதிப்பு ரூ.13.6 கோடியாக இருந்தது. 2018-ல் ரூ.54.5 கோடியாக உயர்ந்து, இந்த முறை ரூ.107.5 கோடியாக உயர்ந்துள்ளது.
ஊடக உரிமைக்கான ஏலம் நடைபெற்று வருகிறது அனைத்து ஊடக உரிமைகளுக்குமான ஏலத்தின் மூலம் பிசிசிஐ வருவாய் ரூ.60,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முன்னாள் வீரர்களையும் பிசிசிஐ கவனிக்க முன் வந்துள்ளது பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, IPL, IPL 2022, IPL Auction