2022-ம் ஆண்டு ஐ.பி.எல்லில் 10 அணிகள் - பி.சி.சி.ஐ கூட்டத்தில் ஒப்புதல்

2022-ம் ஆண்டு ஐ.பி.எல்லில் 10 அணிகள் - பி.சி.சி.ஐ கூட்டத்தில் ஒப்புதல்

ஐ.பி.எல்

2022-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ பொதுக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடும் இந்தியன் பிரிமியர் லீக் தொடர் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் தொடக்கம் முதல் மொத்தம் 8 அணிகள் விளையாண்டு வருகின்றன. ஐ.பி.எல் தொடருக்கு உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் இருந்துவருகிறார்கள்.

  இந்தியாவில் ஒவ்வொருவருடமும் ஏப்ரல்- மே மாதம் நடைபெறும் இந்த தொடரை இந்தியாவில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவருகின்றனர். ஐ.பி.எல் தொடரைப் பொறுத்தவரை, மாநில எல்லைகளைக் கடந்து ரசிர்கள் அவர்களுக்கு பிடித்த வீரர்கள் விளையாடும் அணி வெற்றி பெறவேண்டும் என்று விரும்பிவருகின்றனர். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக, ஐக்கிய அரபு நாடுகளில் பார்வையாளர்கள் இன்றி செம்டம்பர் மாதம் போட்டிகள் நடைபெற்றன.

  இந்தநிலையில், வரும் ஆண்டுகளில் ஐ.பி.எல் தொடரில் 10 அணிகளை இடம் பெறச் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தநிலையில், இன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ பொதுக்கூட்டத்தில் 2022-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் இடம்பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

  வரும் 2021-ம் ஆண்டிலேயே 10 அணிகளை இணைப்பதற்கான முயற்சிகளில் பி.சி.சி.ஐ ஈடுபட்டது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாகவே இந்த ஆண்டு அந்த முயற்சி கைவிடப்பட்டது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: