விளையாட்டு

  • associate partner
Home » News » Sports » IPL BCCI EARNED 4000 CRORE RUPEES THROUGH CONDUCTING IPL 2020 SKD

ஐ.பி.எல் 2020 தொடர் மூலம் ரூ.4,000 கோடி வருமானம் - பி.சி.சி.ஐ விளக்கம்

ஐ.பி.எல் 2020 தொடரை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் 4,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல் 2020 தொடர் மூலம் ரூ.4,000 கோடி வருமானம் - பி.சி.சி.ஐ விளக்கம்
ஐ.பி.எல்
  • Share this:
இந்தியா மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த ஐ.பி.எல் தொடர் மூலம் பி.சி.சி.ஐக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக ஏப்ரல் மாதத்தில் தொடங்கவிருந்த ஐ.பி.எல் தொடர் தாமதமாக செப்டம்பர் மாதம் தொடங்கியது. வழக்கமாக ஐ.பி.எல் தொடரின் இந்தியாவிலுள்ள கிரிக்கெட் மைதானங்கள் ரசிகர்களால் நிரம்பிவழியும். இந்தமுறை, இந்தியாவில் போட்டியை நடத்த முடியாததால் ஐக்கிய அரபு நாடுகளில் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டது.

மைதானங்களில் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற்றாலும், தொலைக்காட்சி, இணையதளம் மூலம் மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது ஐ.பி.எல் 2020.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு பேட்டியளித்த பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமல், ‘கொரோனா காலத்தில் நடத்தப்பட்ட ஐ.பி.எல் தொடரின் மூலம் 4,000 கோடி ரூபாய் வருமானத்தை பி.சி.சி.ஐ சம்பாதித்துள்ளது. நம்முடைய தொலைக்காட்சி பார்வையாளர்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தொடக்க போட்டியின்போது பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.


ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட்ட காலத்தில் 30,000 முறை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்த 1,500 பேர் அதில் பங்களித்தனர்’ என்று தெரிவித்தார்.
First published: November 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories