• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐபிஎல் மூலம் பிசிசிஐக்கு இத்தனைப் பணமா? - கூரையைப் பிச்சிட்டு கொட்டப்போகுது

ஐபிஎல் மூலம் பிசிசிஐக்கு இத்தனைப் பணமா? - கூரையைப் பிச்சிட்டு கொட்டப்போகுது

ஐபிஎல் கோப்பை

ஐபிஎல் கோப்பை

அடுத்த 5 ஆண்டு சுழற்சியில் பிசிசிஐ-க்கு ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைகள் மூலம் மட்டுமே 500 கோடி டாலர்கள், அதாவது 5 பில்லியன் டாலர்கள் பணமழை கொட்டவுள்ளது.

  • Share this:
    புதிய 2 ஐபிஎல் அணிகள் அறிமுகமாவதில் அதானி அணி மற்றும் இன்னொரு பெரிய பணமுதலை அணி வரும் என்று எதிர்பார்த்த நிலையில் வருவாய் அதிகரிப்பு எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. தற்போதைய 5 ஆண்டு சுழற்சி அதாவத் 2018-2022 ஐபிஎல் டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் ஸ்டார் நிறுவனத்திடம் உள்ளது. ஆனால் முடிவு எடுக்கும் இடத்தில் இருக்கும் நிர்வாகிகள் தரப்பிலிருந்து கூறப்படுவது என்னவெனில் தற்போது ரூ.16,347 கோடி அதாவது 2.5 பில்லியன் டாலர்களாக இருக்கும் ஒளிபரப்பு உரிம வரவு அடுத்த 5 ஆண்டு சுழற்சியில் அதாவது 2023-27 சுழற்சியில் தோராயமாக ரூ.36,000 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய மீடியா முதலை ஒன்று ஐபிஎல் மீடியா உரிமங்களுக்காக ஆர்வம் காட்டி வருகிறது. 2022 ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் மோதவிருப்பதால் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக உயரவிருக்கிறது. இதனையடுத்து சொத்து மதிப்பு, ஐபிஎல் வர்த்தக மதிப்பு எகிறுகிறது. மேலும் புதிய 2 அணிகள் மூலம் ரூ.7,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ஒளிபரப்பு உரிமைகள் வானத்தைத் தொடும் என்று பிசிசிஐ எதிர்பார்க்கிறது. எனவே ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை மதிப்பு 5 பில்லியன் டாலர்கள் வரை உயரும்.

    அயல்நாட்டு நிறுவனம் ஒன்று ஐபிஎல் மீடியா அல்லது எந்த ஒரு சொத்து உரிமையையும் பெற வேண்டுமெனில் இந்திய கிளை நிறுவனம் ஒன்று இருந்தால்தான் முடியும்.கடந்த முறை சோனியை தூக்கிச் சாப்பிட்டு ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் உரிமைகளைப் பெற்றது. சோனி ரூ.11,050 கோடி பிட் செய்ய அதைவிடவும் ரூ.5,300 கோடி பிட் செய்து ஸ்டார் தட்டிச் சென்றது.

    அக்டோபர் 25ம் தேதி துபாயில் பிசிசிஐ டெண்டர் வெளியிட உள்ளது. இதே தினத்தில் புதிதாக இணையும் 2 ஐபிஎல் அணிகளையும் பிசிசிஐ அறிவிக்கவுள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் அணியை வைத்திருக்கும் கிளேசர் பேமிலி ஒரு ஒப்பந்தப் புள்ளியை எடுத்திருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் பிடிஐயிடம் தெரிவித்துள்ளன.

    அதானி குழுமம், கோட்டக், அரபிந்தோ பார்மா, டாரண்ட் குரூப், மற்றும் ஆர்பி. சஞ்சீவ்-கோயெங்கா குழுமம் ஆகியவையும் போட்டியில் உள்ளன. ஆண்டு வருவாய் ரூ.3000 கோடி இருக்கும் நிறுவனங்கள், நிறுவனத்தொகுப்புகளுக்கு மட்டுமே ஐபிஎல் அணியை எடுக்க அனுமதி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: