• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐபிஎல் தொடரில் மேட்ச் ஃப்க்சிங்? பிசிசிஐ விசாரணை வளையத்தில் பஞ்சாப் வீரர்

ஐபிஎல் தொடரில் மேட்ச் ஃப்க்சிங்? பிசிசிஐ விசாரணை வளையத்தில் பஞ்சாப் வீரர்

தீபக் ஹூடா

தீபக் ஹூடா

ஐபிஎல் 2021 தொடரில் பஞ்சாப் வீரர் தீபக் ஹூடாவின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
    ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் 2021 தொடரின் 2-வது பாதி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் பஞ்சாப் வீரர் தீபக் ஹூடாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆட்டத்திற்கு முன்பாக தான் ஹெல்மெட் அணியும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருந்தார். பிசிசிஐ விதியின்படி ஐபிஎல் வீரரோ அல்லது வேறு இந்திய அணி வீரரோ எந்த போட்டிக்கும் முன்பாக ஆட்டம் தொடர்பாக போஸ்ட் செய்ய கூடாது. முக்கியமாக பிளேயிங் லெவன் குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ போஸ்ட் செய்ய கூடாது. அது விதிகளுக்கு எதிரானது.

    Also Read : நடராஜனுக்கு கொரோனா உறுதியான நிலையில் பிசிசிஐ சீண்டிய மைக்கேல் வாகன்

    பிளேயிங் 11-ல் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரிவிப்பது சூதாட்டகாரர்களுக்கு மறைமுகமாக கொடுக்கும் சிக்னல் ஆகும். இதனால் புக்கிகள் சூதாட்டத்தில் ஈடுபடமுடியும். இதனால் பிளேயிங் 11 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை அதை வீரர்கள் வெளியே தெரியப்படுத்தக் கூடாது.

    POINTS TABLE:

    இதையடுத்து சூதாட்டத்திற்கு எதிரான ஏசியூ விதிகளை தீபக் ஹூடா மீறியுள்ளதால் அவருக்கு எதிராக விசாரணை நடக்க உள்ளது. தீபக் ஹோடாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் குறித்தும் தவறுதலாக பதிவிடப்பட்டது என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: