அதே ஷாட்.. அதே வெற்றி... 4 வருடங்களுக்கு பின் தோனியை பழித்தீர்த்த அக்ஷர் படேல் - வைரல் வீடியோ

IPL 2020

IPL 2020 | 2016-ம் ஆண்டு தோனி மூலம் தனக்கு ஏற்பட்ட கரையை தற்போது நீக்கி உள்ளார் அக்ஷர் படேல்.

 • Share this:
  சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 3 சிக்சர்கள் விளாசிய அக்ஷர் படேல், 4 ஆண்டுகளு்கு பின் தோனியை பழித்தீர்த்து கொண்டுள்ளார்.

  ஐ.பி.எல் தொடரின் 34-வது லீக் போட்டியில் சி.எஸ்.கே - டெல்லி அணிகள் மோதின. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

  இதையடுத்து முதல் பேட்டிங்கை தொடங்கிய சி.எஸ்.கே அணி 20 ஓவர்கள் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  டெல்லி அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. சி.எஸ்.கே அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா கடைசி ஓவரை வீசினார். ஆனால் அக்ஷர் படேல் யாரும் எதிர்பாராத வகையில் 2,3 மற்றும் 5-வது பந்துகளில் சிக்சர்கள் விளாசி டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தந்தார்.

  இதன் மூலம் 2016-ம் ஆண்டு தோனி மூலம் தனக்கு ஏற்பட்ட கரையை தற்போது நீக்கி உள்ளார் அக்ஷர் படேல். கடந்த 2016-ம் சி.எஸ்.கே அணி தடையில் இருந்த போது தோனி புனே அணிக்காக விளையாடினார். அப்போது பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 22 ரன்கள் அடித்தால் வெற்றி என இருந்தது.

  அப்போது பஞ்சாப் அணியில் இருந்த அக்ஷர் படேல் தான் தோனிக்கு கடைசி ஓவரை வீசுவார். அக்ஷர் படேல் ஓவரை தெறிக்க விட்ட தோனி 3 சிக்சர், ஒரு பவுண்டரி உடன் புனே அணியை வெற்றி பெற செய்வார். கடைசி ஒவரில் பஞ்சாப்பின் வெற்றி கனவை தோனி தகர்த்து எரிந்தார்.

  அதற்கு பழித்தீர்ப்பது போல் நேற்றையப் போட்டியில் 3 சிக்சர்கள் விளாசி சி.எஸ்.கே-வின் வெற்றியை அக்ஷர் படேல் தகர்த்துள்ளார். தோனியும், அக்ஷர் படேலும் அடிக்கும் சிக்சர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்.
  Published by:Vijay R
  First published: