கொரோனாவிலிருந்து மீண்டார் அக்சர் படேல்- டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இணைந்தார்

கொரோனாவிலிருந்து மீண்டார் அக்சர் படேல்- டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இணைந்தார்

அக்சர் படேல்

கொரோனா தொற்று ஏற்பட்டு 3 வாரங்கள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையில் இருந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் கொரோனாவிலிருந்து மீண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இணைந்தார்.

  • Share this:
    கொரோனா தொற்று ஏற்பட்டு 3 வாரங்கள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையில் இருந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் கொரோனாவிலிருந்து மீண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இணைந்தார்.

    மார்ச் 28ம் தேதி டெல்லி அணி தங்கியிருந்த மும்பை ஹோட்டலில் அணியுடன் இணைந்தார் அக்சர் படேல். முதல் பரிசோதனையில் கொரோனா நெகெட்டிவ் என்று வந்தது, ஆனால் ஏப்ரல் 3ம் தேதி டெஸ்ட்டில் கொரோனா பாசிட்டிவ் ஆனது.

    சாதாரண நோய் அறிகுறிகள்தான் இவருக்கு இருந்தன, இதனால் பிசிசிஐயின் கோவிட் பிரத்யேக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    27 வயது அக்சர் படேல் இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டு வந்து டெல்லி அணியுடன் இணைந்ததை அந்த அணி சமூக வலைத்தளத்தில் வீடியோ போட்டு கொண்டாடி வருகிறது.

    மக்களை மீண்டும் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி என்று அந்த வீடியோவில் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

    நேற்று சதம் கண்ட தேவ்தத் படிக்கலுக்குப் பிறகு அக்சர் படேல் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். இருமுறை தவறாக பாசிட்டிவ் என்று வந்த சந்தர்ப்பங்களும் உள்ளன.

    டெல்லி வீரரான தென் ஆப்பிரிக்காவின் அதிவேக பவுலர் ஆன்ரிச் நார்ட்டியேவுக்கு தவறாக பாசிட்டிவ் என்று வந்து நீண்ட காலம் தனிமையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ராணாவுக்கும் பாசிட்டிவ் என்று வந்தது. ஆனால் ஆர்டி-பிசிஆர் சோதனையில் நெகெட்டிவ் என்று வந்து ஆறுதல் அளித்தது.

    அக்சர் படேலுக்கு மாற்றாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பையின் இளம் இடது கை ஸ்பின்னர் ஷாம்ஸ் முலானி என்பவரை அணியில் தேர்வு செய்திருந்தது.

    அடுத்த ஐபிஎல் போட்டியில் ஞாயிறன்று டெல்லி அணி ஹைதரபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் அக்சர் படேல் வரவு டெல்லி அணியில் உற்சாகத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Muthukumar
    First published: