Corona Travel Ban | ரத்தம் தோய்ந்த கைகளா? ‘அபத்தம்’ - மைக்கேல் ஸ்லேட்டருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதிலடி

Corona Travel Ban | ரத்தம் தோய்ந்த கைகளா? ‘அபத்தம்’ - மைக்கேல் ஸ்லேட்டருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதிலடி

ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன்.

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியர்களாக இருந்தாலும் திரும்பக் கூடாது மீறினால் சிறைத்தண்டனை அபராதம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவிக்க அதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான மைக்கேல் ஸ்லேட்டர் கடுமையாக ‘பிரதமரே உங்கள் கைகள் ரத்தம் தோய்ந்த கைகள்’ என்று சாட அதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதிலடி கொடுத்துள்ளார்.

  • Share this:
    இந்தியா கொரோனா வைரஸ் மையமாகி விட்டது, இரண்டாம் அலை தீவிரமாக நாடு முழுதும் பரவி வருகிறது, இந்தியாவின் சுகாதார அமைப்பே உடைந்து விடும் போல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, ஆனால் மத்திய மாநில அரசுகள் அந்த நிலை ஏற்படாதவாறு தங்களால் இயன்றதை கொரோனா பரவல் தடுப்புக்காக செய்து வருகின்றனர். நாளொன்றுக்கு 3 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுக் கொண்டேயிருப்பது கடந்த 10 நாட்களாக இருந்து வருகிறது. ஐபிஎல் போட்டிகளே கொரோனாவினால் தள்ளிப்போடப்படுகிறது, சிஎஸ்கே, ஆர்சிபி வீரர்களில் சிலருக்கு கொரோனா என்று செய்திகள் வெளியாகின.

    இந்தியாவிலிருந்தும் இந்தியாவுக்கு 14 நாட்களுக்குள் சென்று திரும்பிய யாரும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யக் கூடாது என அந்நாடு அறிவித்துள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கள் சொந்த குடிமக்களே ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது, சிறை தண்டனை அல்லது $66,000 என்ற கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் இந்த புதிய விதிமுறை மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

    ஐபிஎல் தொடருக்காக இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வர்ணணையாளர் மைக்கேல் ஸ்லேட்டர் ஆஸ்திரேலிய அரசின் முடிவுக்காக ஆஸி பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.

    மைக்கேல் ஸ்லேட்டர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பு குறித்து நம் அரசு அக்கறை கொள்ளுமானால், எங்களை நாட்டிற்கு திரும்ப அனுமதித்திருக்க வேண்டும். இது ஒரு அவமானம்!! உங்கள் கைகளில் இரத்தம் இருக்கிறது பிரதமர் அவர்களே.

    எங்களை எப்படி இப்படி விதத்தில் நடத்துகிறீர்கள்? நீங்கள் எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட முறையை கையாளுகிறீர்கள்? ஐ.பி.எல். இல் பணியாற்ற எனக்கு அரசாங்க அனுமதி இருந்தது, ஆனால் இப்போது அரசாங்கம் என்னை புறக்கணித்துள்ளது” என்று கடுமையாக ஆஸ்திரேலியப் பிரதமரைச் சாடியுள்ளார்.

    ஸ்லேட்டர் மாலத்தீவுகளுக்குச் சென்றுள்ளார். ட்விட்டரில் ஆஸ்திரேலியாவின் பயணத்தடையை ‘அவமானம்’ என்று அவர் பதிவிட. பிரதமர் ஸ்காட் மாரிசன் “இல்லை, நிச்சயமாக இது அபத்தம். அதிக ஆஸ்திரேலியர்களை பாதுகாப்பாக நாட்டுக்குக் கொண்டு வரத்தான் இந்த முடிவு. ஆஸ்திரேலியாவில் 3வது கொரோனா அலை பரவாமல் தடுக்கவே இந்தப் பயணத் தடை.

    ஒவ்வொரு சிஸ்டத்திற்கும் இந்தக் காலக்கட்டம் அழுத்தம் தரக்கூடியதே, நான் நம் சிஸ்டத்தை உடைக்க தயாராக இல்லை. மாறாக சிஸ்டத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதே என் பணி. எனவே நான் அதிக ஆஸ்திரேலியர்களை தாய்நாடு திரும்பச் செய்ய வைக்க முடியும், நீண்ட காலத்துக்கு அவர்கள் பாதுகாப்பாக இருக்கவே இந்த ஏற்பாடு” என்று ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published: