HOME»NEWS»SPORTS»ipl australia t20 t natarajan joins india team vjr

ஆஸ்திரேலியா டி20 தொடர் : இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு

ஆஸ்திரேலியா டி20 தொடர் : இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு
நடராஜன்
  • Share this:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் தோளில் காயம் ஏற்பட்டதால் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல் 2020 தொடரில் இந்திய அணி வீரர்கள் தற்போது விளையாடி வருகின்றனர். ஐ.பி.எல் 2020 தொடர் இறுதி போட்டி நவம்பர் 10-ம் தேதி நடைபெறுகிறது. ஐ.பி.எல் 2020 தொடருக்கு பின் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய வீரர்கள் 3 ஒரு நாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின் முதல் ஒரு நாள் போட்டி நவம்பர் 27-ம் தேதி சிட்னி மைதானத்தில் தொடங்குகிறது.



ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. தமிழகத்தை சேர்ந்த நடராஜன் கூடுதல் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்த வருண் சக்கரவர்த்திக்கு தோளில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

சேலம் சின்னம்பட்டியை சேர்ந்தவர் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். துல்லியமான யார்க்கர், தரமான பந்துவீச்சு மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடராஜன். டி-வில்லியர்ஸ், தோனி உள்ளிட்ட பேட்ஸ்மேன்களை திணற வைத்து விக்கெட் வீழ்த்திய நடராஜன் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.













ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: