Home /News /sports /

முதல் போட்டியே பாகிஸ்தானுடன், அவர் வேற பார்மில் இல்லை- ரோஹித் சர்மாவின் தலைவலி

முதல் போட்டியே பாகிஸ்தானுடன், அவர் வேற பார்மில் இல்லை- ரோஹித் சர்மாவின் தலைவலி

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

நல்ல தீர்வு சொல்லும் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டும் கொரோனா பாதிப்பினால் ஆசியக் கோப்பையில் பங்கேற்பாரா என்பதும் தெரியவில்லை

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆசியக் கோப்பை டி20 தொடரில் முதல் போட்டியிலேயே இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, சொதப்பி தோற்றால் விமர்சனங்களையும் கேலிகளையும் தாங்க முடியாது, அதனால் ரோஹித் சர்மாவுக்கு பெரிய தலைவலி காத்திருக்கிறது.

    அணித்தேர்வு அவருக்கு பெரிய கவலையளிப்பதாகவே இருக்கிறது.  உதாரணமாக கே.எல்.ராகுல் உடல் நலம் தேறியவுடன் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடி உடல் பரிசோதனை, பார்ம் ஆகியவற்றை சோதிக்காமலேயே ஜிம்பாப்வே தொடருக்கு அனுப்பினார்கள், அதுவும் கேப்டனாக ஆனால் அவர் அங்கு சொதப்பி விட்டார். ஒரு சாதாரண பவுலிங் உள்ள கத்துக்குட்டி அணியிடமே ராகுல் தடவினார் என்றால் பாகிஸ்தானுடன் என்ன ஆகும் என்று ரோஹித் சர்மாவுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.

    அதனால் ஆசியக் கோப்பையிலும் எங்கு சொதப்பி விடுவாரோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் தனக்கு ஜோடியாக ரிஷப் பண்ட்டை தொடக்கத்தில் இறக்கலாமா, அல்லது சூரியகுமார் யாதவ்வை இறக்கலாமா என்று பரிசீலனை நடைபெற்று வருகிறது, நல்ல தீர்வு சொல்லும் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டும் கொரோனா பாதிப்பினால் ஆசியக் கோப்பையில் பங்கேற்பாரா என்பதும் தெரியவில்லை.  சூரியகுமார் யாதவ் 4ம் நிலையில் கில்லாடி வீரர், எந்த இலக்கையும் அசால்ட்டாக சேஸ் செய்து விடுவார்.

    இதையும் படிங்க: 38 ஆண்டுகால ஆசியக் கோப்பை கிரிக்கெட் வரலாறு : 1984 முதல் 2018 வரை கோப்பையை வென்றவர்கள்

    அவரைப்போய் ஓப்பனிங்கில் இறக்கி அவரும் காலியாகி விட்டால் பிறகு என்ன செய்வது? இதற்காகத்தான் ஓப்பனிங்கில் பலரையும் இறக்கிப் பார்க்கிறார்கள். தீபக் ஹூடா கூட ஒரு ஆக்ரோஷமான தெரிவுதான்.இன்னொரு புறம் அனுபவ வீரர் விராட் கோலி பார்முக்கு வருவாரா இல்லையா என்பதே தெரியவில்லை. பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், செஹல், பாண்டியா நம்பத்தகுந்தவர்கள். மற்றபடி அர்ஷ்தீப் சிங் அனுபவமற்றவர், ஆவேஷ் கான் ஜிம்பாப்வே பேட்டரிடமே சாத்து வாங்கினவர், எனவே அவரை வைத்துக் கொள்வது ஆபத்து. ஆகவே இப்போதைய இந்திய அணியில் நம்பத்தகுந்தவர்கள் என்றால் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், பாண்டியா, ஜடேஜா மற்றும் பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், செஹல், ஹர்திக் பாண்டியாதான்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Asia cup, Indian team for asian cup, Rohit sharma

    அடுத்த செய்தி