என் அப்பா அம்மா கிட்ட சொல்லாதீங்க: அஸ்வின் ருசிகரம்

ஜாஸ் பட்லரை ரன் அவுட் செய்த அஸ்வின்.

மன்கடிங் என்ற ரன் அவுட் முறை கடும் விமர்சனங்களுக்கு ஆளான போதும் அது குறித்த ஆரோக்கியமான விவாதங்களை கிளப்ப வைத்தவர் அஸ்வின். இவர் ஜாஸ் பட்லரை ஐபிஎல் போட்டியில் ரன்னர் முனையில் பந்து வீசுவதற்கு முன்பாகவே அவர் கிரீசை விட்டு வெளியேறியதற்காக ரன் அவுட் செய்த மன்கடிங் ரன் அவுட் உலக பேமஸ் ஆனது.

  • Share this:
    மன்கடிங் என்ற ரன் அவுட் முறை கடும் விமர்சனங்களுக்கு ஆளான போதும் அது குறித்த ஆரோக்கியமான விவாதங்களை கிளப்ப வைத்தவர் அஸ்வின். இவர் ஜாஸ் பட்லரை ஐபிஎல் போட்டியில் ரன்னர் முனையில் பந்து வீசுவதற்கு முன்பாகவே அவர் கிரீசை விட்டு வெளியேறியதற்காக ரன் அவுட் செய்த மன்கடிங் ரன் அவுட் உலக பேமஸ் ஆனது.

    ரன்னர் முனையில் இருப்பவர் இது போன்று முன் கூட்டியே கிரீசிற்கு வெளியே சில அடிகள் முன்னே வந்தால் ஒரு ரன்னை 2 ஆக்க முடியும், அதே போல் கடைசி பந்தில் 2 ரன் எடுத்தால், ஒரு ரன் எடுத்தால் வெற்றி எனும்போது இம்மாதிரி ஓடுவது பேட்டிங் தரப்புக்கு அநியாய சாதகத்தை அளிக்கிறது எனவே மன்கடிங் செய்யலாம் என்பது தான் விதிமுறை, செய்யக் கூடாது என்பது தார்மீகம், ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட். இரண்டில் எது சரி என்பது முடிவற்ற விவாதமாக இன்றும் உள்ளது.



    பேட்ஸ்மென் ரன்னர் முனையில் அவ்வாறு செய்யும் போது முன் கூட்டியே பவுலர் ஒருமுறை எச்சரிக்க வேண்டும், ‘த பாரு, இன்னொரு தடவை நீ வெளியே வரத பார்த்தேன் ரன் அவுட் தான்’ என்று எச்சரிக்க வேண்டும், அப்படி எச்சரிக்காமல் ரன் அவுட் செய்தால், பவுலர் முன் கூட்டியே திட்டமிட்டு பேட்ஸ்மென் ரன்னர் முனையில் கிரீசை விட்டு வெளியே வரும் வரை ஆக்‌ஷனை முடிக்காமல் அவர் வெளியே வந்தவுடன், அதாவது இயல்பாகவே அவர் வெளியே வரும்போது காத்திருந்து ரன் அவுட் செய்யும் மோசடிக்கும் சாத்தியம் உள்ளது.

    தெ.ஆ. வீரர் பீட்டர் கர்ஸ்டனை மன்கடிங் செய்த கபில்.


    ஆகவே தான் ஒரு முறை எச்சரிக்க வேண்டும். கபில்தேவ், பீட்டர் கர்ஸ்டனை ரன் அவுட் செய்யும் போது எச்சரித்தார். எச்சரித்தும் அவர் திருந்தாததால் ரன் அவுட் செய்தார். ஆனால் அஸ்வின் அந்த ஐபிஎல் போட்டியில் பட்லரை எச்சரிக்கவில்லை. ஆகவே பட்லர் அன்று அதிரடி பார்மில் இருந்தார் விட்டால் ராஜஸ்தான் வென்று விடும் என்று கிங்ஸ் லெவன்பஞ்சாப் அஸ்வின் ரன் அவுட் செய்தார், ராஜஸ்தானும் அவர் அவுட்டுக்குப் பிறகு தோற்றுப் போனது.

    இன்று வரை அஸ்வின் செய்தது சரியா, தவறா என்ற விவாதம் கிரிக்கெட் உலகில் நடைபெற்று வருகிறது. ஆனால், அஸ்வின் தான் செய்தது விதிமுறைகளின் படி சரியே என்பதால், தனது நம்பிக்கையில் உறுதியுடன் இருக்கிறார்.



    அஸ்வின் டெல்லி அணிக்காக விளையாடியபோது அந்த அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங், இதுபோல ரன் அவுட் செய்வதைக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது. அஸ்வினுடன் கண்டிப்பாக இதுபற்றிப் பேசுவேன் என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து அஸ்வினும் பாண்டிங்கும் இதுகுறித்து தொலைபேசியில் உரையாடியது அஸ்வினின் யூடியூப் சேனலில் பகிரப்பட்டது. கடைசியில் ரிக்கி பாண்டிங்கும் அஸ்வின் வழிக்கே திரும்பினார்.

    தற்போது, 92-93ஆம் வருடம், இந்திய அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் நடந்த சம்பவத்தை ஒரு பயனர் பகிர்ந்திருந்தார்.

    இந்தக் காணொலியில் கபில்தேவ் பந்துவீசுவதற்கு முன் எதிர்முனையில் இருக்கும் கேர்ஸ்டன் க்ரீஸை விட்டு வெளியேற கபில்தேவ் அவருக்கு எச்சரிக்கை செய்கிறார். இதற்கு அடுத்த ஆட்டத்தில் இதேபோல பந்துவீசுவதற்கு முன் எதிர்முனையில் நின்றுகொண்டிருந்த வெஸல்ஸ் க்ரீஸை விட்டு சில அடி எடுத்து வைக்க, கபில்தேவ் அவரை ரன் அவுட் செய்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

     



    இதற்கு பதிலளித்திருக்கும் ஒரு பயனர், கபில்தேவ் செய்தது சரியே. எச்சரித்துவிட்டுத் தான் அவுட் ஆக்கினார் என்று கூறி இந்தப் பதிலில் அஸ்வினையும் டேக் செய்திருந்தார்.

    இதற்குப் பதில் அளித்த அஸ்வின், “கிரீசை விட்டு ரன்னர் வெளியே வந்தால் நான் மீண்டும் ரன் அவுட் செய்வேன். ஆனால் அவ்வாறு ரன் அவுட் செய்வதற்கு பவுலரும் முன் கூட்டியே தீர்மானிக்க வேண்டும் இதற்கும் உங்கள் அனுமதியை கோருகிறேன். ஆனால் இதை என் பெற்றோரிடம் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என்று ருசிகரமாக பதிவிட்டுள்ளார்.
    Published by:Muthukumar
    First published: