Ravichandran Ashwin | கொரோனாவைக் கண்டு மிகவும் பயப்படுங்கள், பயம் மட்டுமே சூழலை மாற்றும்- அஸ்வின்

அஸ்வின்.

பயம் மட்டுமே இது போன்ற சூழலை மாற்றும் என்றால் அந்தப் பயம் மக்களிடம் இருப்பது அவசியம். தயவு செய்து பயப்படுங்கள். மிகவும் பயத்துடன் இருங்கள் என்று கூறுகிறார் அஸ்வின்.

  • Share this:
    கொரோனா குறித்து பயமுறுத்தும் விஷயங்களைப் பரப்ப வேண்டாம் என்று கூறுகின்றனர், ஆனால் பயம் மட்டுமே இந்தச் சூழலை மாற்றும் என்கிறார் கிரிக்கெட் வீரர் அஸ்வின்.

    அஸ்வினின் குடும்பத்தில் 10 பேருக்குக் கொரோனா தொற்று இருந்தது. தந்தை, குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்டனர், இதனையடுத்து ஐபிஎல் தொடருக்கு குட் பை சொல்லி விட்டு வீடு வந்து சேர்ந்தார் அஸ்வின். இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்தை என்ன சேதி என்று கேட்கத் தயாராகி வருகிறார்.

    தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு, தடுப்பூசிதான் தன் தந்தையைக் காப்பாற்றியது என்று ஏற்கெனவே கூறியிருந்தார் அஸ்வின்.

    இந்நிலையில் பயமின்றி திரிவதுதான் கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்ற கருத்தில் அவர் பயம் ஒன்றுதான் சூழலை மாற்றும் என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் சமூகவலைத்தளத்தில் கூறியது வருமாறு:

    கொரோனாவை நினைத்தாலே பயமாக உள்ளது, இது தொடர்பாக அச்சமூட்டும், மக்களைப் பீதிக்குள்ளாக்கும் விஷயங்களைப் பரப்ப வேண்டாம் என்று அனைவரும் சொல்கின்றனர்.

    ஆனால் பயம் மட்டுமே இது போன்ற சூழலை மாற்றும் என்றால் அந்தப் பயம் மக்களிடம் இருப்பது அவசியம். தயவு செய்து பயப்படுங்கள். மிகவும் பயத்துடன் இருங்கள்.

    கொரோனாவை எதிர்த்துப் போராட இது ஒன்றுதான் வழி. கொரோனாவை போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்ள வேண்டும். அடுத்து வரும் நாட்கள் இந்த விஷயத்தில் முக்கியமானவை, பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்போம். வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவோம்.

    உங்களது பயம் எனக்குப் புரிகிறது, என் குடும்பத்தினர் கொரோனாவால் அவதிப்பட்ட போது அவர்களை கவனித்துள்ளேன். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் கொரோனாவின் பயங்கர ஆபத்தை இன்னும் நிறைய பேர் புரிந்து கொள்ளவில்லை.” என்று கூறுகிறார் அஸ்வின்.
    Published by:Muthukumar
    First published: