• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • வாழ்க்கை ஒரு வட்டம்: தத்துவ முத்துக்களை உதிர்க்கும் அஷ்வின்

வாழ்க்கை ஒரு வட்டம்: தத்துவ முத்துக்களை உதிர்க்கும் அஷ்வின்

அஷ்வின்

அஷ்வின்

 • Share this:
  35 வயதாகும் அஷ்வின் சில வேளைகளில் மன்கட் ரன் அவுட் செய்யும் போதும், பேட்ஸ்மென் மேல் பந்து பட்டுச் செல்லும் போதும் நியாயப்படுத்தும் போது கல்லி கிரிக்கெட்டராக பேசுவார், சில வேளைகளில் அவர் தத்துவ முத்துக்களை உதிர்ப்பார். ஆனால் இரண்டும் வேறு, கிரிக்கெட் குறித்த தனது அணுகுமுறையை வாழ்க்கை குறித்த தன் அணுகுமுறையாக அஷ்வின் பார்ப்பதை இந்தப் பேட்டியில் காணலாம்.

  கிரிக்கெட் இணையதளத்துக்குப் பேட்டியளித்த அஷ்வின், மிக முக்கியமான ஒன்றை கூறினார், அதாவது நமக்கு தோதான நாம் வெற்றியடையும் காலங்களில் விவேகமாக இருப்பது பற்றி பேசியுள்ளார். வெற்றி கெக்கலிப்பு கூடாது என்கிறார். இதற்கு உதாரணமாக ஷேன் வார்னையும் சச்சின் டெண்டுல்கரையும் கூறினார் அஸ்வின்.

  “டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டேன் என்பது மனதுக்கு இதமாக இருந்தது. என்னை நானே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளவும் நான் என்ன சாதிக்க விரும்புகிறேனோ அதன் நிறைவேற்றத்தின் திருப்தி தரும் அம்சமாகவும் இந்தத் தேர்வைப் பார்க்கிறேன். உலகக்கோப்பைக்குள் நுழையும் சிறப்பு கனவு எனக்கு இருந்தது. காலத்தின் ஒரு புள்ளியில் நிரூபிக்க வேண்டும் என்ற அவா இருந்தது. சரியோ தவறோ மற்றவர்களுக்காக அல்லாவிடினும் நமக்கு நாமே நிரூபித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

  இரண்டு தோல்விகளுக்குப் பிறகு (பாக், நியூசிலாந்து) கொஞ்சம் அது பற்றி தாழ்வாகத்தான் நினைத்தேன். அரையிறுதி வாய்ப்பு தடுமாற்றத்தில் இருக்கிறது. ஆனால் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பிறகு விரல்களைக் கோர்த்து எல்லாம் சரியாகப் போக வேண்டும் என்ற நம்பிக்கையை மட்டும் தக்க வைத்துள்ளது. இதை விடுத்தால், அந்த மேட்ச் ஒரு ஸ்பெஷல். நான் வீசிய ஒவ்வொரு பந்தும் நினைத்த இடத்தில் விழுந்தது.

  கடைசி ஓவரில் கலக்கிய அஸ்வின்.


  வட்டம் முடிவுக்கு வந்தது என்று நான் கூறவில்லை, ஆனால் விரல்களில் பந்தை ஸ்பின் செய்யும் பவுலர்கள் பற்றிய பார்வை மாற வேண்டும். 2017-க்குப் பிறகே நான் பந்து வீச்சில் டெஸ்ட் போட்டிகளில் ஒரு நல்ல கட்டத்தைக் கடந்து வந்து கொண்டிருந்தேன், அதே தருணத்தில் தான் வேறு விதமான வித்தியாசமான திடீர் பந்துகளை வீசுவதில் என் வசம் நிறைய பந்துகள் அப்படி இருந்தன.

  ஆனால் அப்போதுதான் வட்டம் முடிவுக்கு வந்தது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி வந்தது. அந்த நிலையத்தில் நான் தங்கி கிரிக்கெட் பற்றி சிந்திக்க வேண்டியதாயிற்று (இந்த ஆப்கான் போட்டிக்கு முன்பாக அஸ்வின் ஆடிய கடைசி வெள்ளைப்பந்து சர்வதேச போட்டியாகும் அது).

  அதன் பிறகே நான் ஒரு டி20 பவுலராக பரிணாம வளர்ச்சி பெற்றேன். அதன் பிறகே சிலபல நுட்பமான, சூட்சுமமான பந்துகளை வீசினேன், அதை கேரம் பந்துகள், ஆஃப் ஸ்பின்கள், ஆர்ம் பந்துகள் என்று பெயரிட்டனர்.  அன்று குல்புதீன் நயீபை வீழ்த்திய பந்து கேரம் பந்தைத் தவிர வேறு எந்த பந்து என்றும் கூறலாம். 2017-ல் இருந்ததை விட நிறைய பந்துகள் என் கைவசம் இருந்தன.

  அஸ்வின்.


  ஒரு வலது கை பேட்ஸ்மெனுக்கு வீசும்போது இடது கை ஸ்பின் பவுலர் போல், லெக் ஸ்பின்னர் போல் என்னை நினைத்துக் கொண்டு வீசுவேன், ஒரு இடது கை வீரர் இருக்கிறார் என்றால் அவருக்கு வீசும்போது ஆஃப் ஸ்பின் பவுலர் போல் யோசிப்பேன். இப்படிச் சிந்திப்பது எனக்குள் தீவிர நோக்கத்தை உருவாக்கும் இந்தத் தீவிர நோக்கம் செயல்படுத்ததில் நம்மை கொண்டு வந்து சேர்க்கும். நிறைய கடின உழைப்பு அங்கு உள்ளது, ஆனால் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றிய பார்வையில், கருத்தொற்றுமை மாற வேண்டும்.

  வாழ்க்கை ஒரு வட்டம் என்று நான் நம்புகிறேன், சிலருக்கு அது சிறிய வட்டம், சிலருக்கு பெரிய வட்டம். நம் கைகளில் எதுவும் இல்லை. என் வாழ்க்கை செல்லும் போக்குகளையும், என் கிரிக்கெட் வாழ்வின் நீக்குப் போக்குகளையும் நான் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளேன். நான் ஒரு நீண்ட பார்மில் இருக்கும்போதெல்லாம் என் கரியரில் நீண்ட பள்ளம் ஏற்படுகிறது. நீண்ட கால அமைதி ஏற்பட்டு விடுகிறது, இதைப் பற்றி நான் அதிகம் யோசிக்க விரும்பவில்லை. இதுதான் என் வாழ்க்கை போக்கு என்பதைப் புரிந்து கொண்டேன்.

  அஸ்வின்.


  நல்ல வெற்றி பெறும் தருணங்களில் நாம் இங்கிதத்துடனும் விவேகத்துடனும் இருப்பதை பலரும் ஒரு கூற்றாக கூறியுள்ளனர். ஆனால் அதையே வாழ்ந்திருக்கிறேம் அதை வாரி அணைத்துக் கொண்டிருக்கிறேன். ஷேன் வார்ன் ஒருமுறை கூறினார் நம் வாழ்க்கையில் பெரும்பாலும் 33% வெற்றி காண்போம் என்றார். சச்சின் டெண்டுல்கரும் இதே பார்வையை ஏதோ ஒரு கட்டத்தில் கொண்டிருந்தார், நானும் அப்படித்தான், நான் வித்தியாசமானவனல்ல.

  நாம் நம் வேலையைச் செய்துக் கொண்டிருந்தால் கடினமாக உழைத்துக் கொண்டிருந்தால் வாய்ப்பு நம் வீட்டுக் கதவை தட்டவே செய்யும். அன்றைக்கு கதவுகளை உடைத்துக் கொண்டு பீறிட்டு எழும் தெரிவுகள் நம் கையில் இருக்கும். அப்போது தாழ்பாள்கள், பூட்டுகள் உடையும். இதுதான் வாழ்க்கை என்பது. நம்பிக்கையையும் உத்வேகத்தையும் இழப்பது சுலபம். அதை மட்டும் நான் கண்டிப்பாகச் செய்ய மாட்டேன்.

  என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் எனக்கு என்ன கொடுத்திருக்கிறது என்பது பொருட்டல்ல, நான் கிரிக்கெட்டுக்கு என்ன கொடுத்திருக்கிறேன் என்பதுதான். நான் எப்படி மகிழ்ச்சியுடன் ஆட்டத்தை ஆடினேன் என்பதுதான். எங்கேயாவது 3 ஸ்டம்ப்களை நட்டு வந்து வீசு என்றால் நான் பெரும்பாலும் வீசுவேன்” இவ்வாறு தத்துவார்த்தமாகப் பேசினார் அஷ்வின்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: