முகப்பு /செய்தி /விளையாட்டு / DC vs PBKS | ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி ரத்து - தகவல்

DC vs PBKS | ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி ரத்து - தகவல்

டெல்லி கேப்பிட்டல்ஸ்

டெல்லி கேப்பிட்டல்ஸ்

IPL 2022 | டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்றைய ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஐபிஎல் தொடரில் 32-வது லீக் போட்டியில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இதனிடையே டெல்லி அணியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் , பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட், ஸ்போர்ட்ஸ் மசாஜ் தெரபிஸ்ட் சேத்தன் குமார், குழு மருத்துவர் அபிஜித் சால்வி மற்றும் சமூக ஊடக உள்ளடக்க குழு உறுப்பினர் ஆகாஷ் மானே ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

டெல்லி அணியில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து புனேவில் நடைபெற போட்டி மும்பை மைதானத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட 5 பேரும் கொரோனா நெகட்டிவ் வந்தால் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.

Also Read : வைடு தராத அம்பயருக்கு ஒரு பாட்டில் பீர் பார்சல் - ஹேசில்வுட் குஷி

டெல்லி மற்ற வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் டெல்லி அணியை சேர்ந்த வெளிநாட்டு வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டு வேறொரு நாளுக்கு போட்டி மாற்றப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Delhi Capitals, IPL 2022, Punjab Kings