முகப்பு /செய்தி /விளையாட்டு / களமிறங்குவாரா அம்பதி ராயுடு? உடல்நிலை குறித்து சி.எஸ்.கே பதில்

களமிறங்குவாரா அம்பதி ராயுடு? உடல்நிலை குறித்து சி.எஸ்.கே பதில்

MIvCSK (நன்றி : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

MIvCSK (நன்றி : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

IPL 2020 | அடுத்த 2 போட்டிகளில் அம்பதி ராயுடு விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அம்பதி ராயுடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்காமல் ஒய்வில் இருந்தார்.

ஐ.பி.எல் 2020 தொடரில் விளையாடும் வீரர்களுக்கு அடுத்தடுத்து காயம் ஏற்படுவது சோகமான ஒன்றாக உள்ளது. டெல்லி அணியில் இஷாந்த் சர்மா மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.

சன்ரைசர்ஸ் அணி வீரர் மிட்செல் மார்ஷ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசிய போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து முழுமையாக விலகி உள்ளார். சென்னை அணி வீரர் அம்பதி ராயுடு காயத்திலிருந்து குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அடுத்த 2 போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

SCHEDULE TIME TABLE:

இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அம்பதி ராயுடு உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதில், “அம்பதி ராயுடுவின் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். அடுத்தப் போட்டியில் அவர் விளையாடமல் இருப்பார். இருந்தாலும் சரியான நேரத்தில் அவர் போட்டியில் பங்கேற்கலாம்“ என்றுள்ளார்.

POINTS TABLE:

சி.எஸ்.கே அணி நாளை மாலை 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது.

First published:

Tags: CSK, IPL 2020