HOME»NEWS»SPORTS»ipl ahmedabad to join as 9th ipl team vjr

ஐ.பி.எல் தொடரில் புதிய அணி... கங்குலி போட்ட மாஸ்டர் பிளான்

ஐ.பி.எல் 2020 தொடரை பிசிசிஐ வெற்றிகரமாக நடத்தி முடிந்திருந்தாலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. இதை சரிக்கட்ட அடுத்த ஐ.பி.எல் தொடரில் 9-வது அணியாக புதிய அணியை களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் புதிய அணி... கங்குலி போட்ட மாஸ்டர் பிளான்
  • Share this:

ஐ.பி.எல் 2020 தொடரை வெளிநாட்டில் நடத்தியது, மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது, சீன டைட்டில் ஸ்பான்சர் விலகியது என நடப்பு சீசனில் பிசிசிஐ-க்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய பிசிசிஐ தலைவர் சவுரங் கங்குலி மாஸ்டர் பிளான் ஒன்றை திட்டமிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் நடைபெற இருந்த ஐ.பி.எல் 2020 தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கியது. ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் 2020 எந்தவித பாதிப்புமின்றி வெற்றிகரமாக முடிந்துள்ளது. டெல்லி அணி உடனான இறுதிப் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஐ.பி.எல் 2020 தொடரை பிசிசிஐ வெற்றிகரமாக நடத்தி முடிந்திருந்தாலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. இதை சரிக்கட்ட அடுத்த ஐ.பி.எல் தொடரில் 9-வது அணியாக புதிய அணியை களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலைகளில் சவுரவ் கங்குலி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அஹமதாபாத் அணியை புதிததாக களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.



ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பொதுவாக டிசம்பர் மாதங்களில் நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனாவால் போட்டிகள் தள்ளிப்போனதால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இறுதியில் ஐ.பி.எல் ஏலம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மெகா ஐ.பி.எல் ஏலத்தில் புதிய அணியை களமிறக்கியும், போட்டிகளை அதிகப்படுத்தியும் வருவாய் இழப்பை சரிக்கட்ட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஐ.பி.எல் சீசனில் பல்வேறு மாற்றுத்திட்டங்களை கொண்டு வரவும் சவுரவ் கங்குலி திட்டமிட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.
Published by:Vijay R
First published: