என் வாழ்க்கையை அவர்கள் வாழ முடியாது- விமர்சகர்களுக்கு கோலி பதிலடி
என் வாழ்க்கையை அவர்கள் வாழ முடியாது- விமர்சகர்களுக்கு கோலி பதிலடி
கோலி அவுட்
விராட் கோலி கிரிக்கெட் பார்ம் வேண்டுமானால் தொடர் கோல்டன் டக்குகளாக இருக்கலாம், ஆனால் வணிக ரீதியாக அவர் ஒரு பொன் முட்டையிடும் வாத்து, எனவே அவரை அணியிலிருந்து நீக்குவது என்பதெல்லாம் சாத்தியமேயல்ல, மாறாக அவர் அணியிலிருந்து விலகினால் அது அந்தத் தொடருக்குத்தான் நஷ்டம் என்ற நிலையே உள்ளது, இந்நிலையில் கோலி அளித்த ரிலாக்ஸ் பேட்டியில் தன் பார்ம், டக்குகள் பற்றி ஒரு மனம் திறந்த ஜாலி பேட்டி அளித்துள்ளார்.

ஆர்சிபி இன்சைடர் நிகழ்ச்சியில் ஒவ்வொரு முறையும் முதல் பந்தில் அவுட் ஆகும் போது ஒரு புன்னகையுடன் வெளியேறியது ஏன் என்பதை விளக்கினார். அதாவது என்னடா இது என்ன செய்தாலும் இந்த மோசமான பார்மிலிருந்து வெளியே வர முடியவில்லையே என்றஒரு ஆச்சரியமும் விரக்தியும் கலந்த புன்னகைதான் அது.
“2-வது டக் அடித்தவுடன் கைவிடப்பட்ட நிலை என்பார்களே அது இதுதானோ என்பது போல் உணர்ந்தேன். என் கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி நடந்ததேயில்லை. நான் புன்னகைத்ததற்கு அதுதான் காரணம். அதாவது ரொம்ப காலம் கழித்து கிரிக்கெட் ஆட்டம் எனக்கு எல்லாவற்றையும் திறந்து காண்பித்து விட்டது என்பதாக உணர்ந்தேன்.
வர்ணனையாளர்கள், விமர்சகர்கள் என்னை விமர்சிக்கலாம் ஆனால் என் எண்ணத்திற்குள் உணர்வுக்குள் அவர்கள் எப்படி வர முடியும்? அவர்களால் நான் எப்படி உணர்கிறேன் என்பதை உணர முடியாது. என் வாழ்க்கையை அவர்கள் வாழ முடியாது. அந்தக் கணத்தில் அதை வாழ்வது நான் தான், அவர்கள் அல்ல, அவர்களால் அந்தக் கணத்தை வாழ முடியாது. எனவே சத்தத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை நீங்கள் கூறுங்கள்.
ஒன்று டிவி சப்தத்தைக் குறைக்க மியூட் செய்ய வேண்டும். அல்லது அவர்கள் பேசுவது நம் காதில் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் இந்த இரண்டையும் செய்கிறேன்” என்றார்.
ஆனால், கோலி நிச்சயம் பெரிய பார்முக்கு விரைவில் திரும்புவார் என்றே தெரிகிறது, அவர் அளவுக்கு மன உறுதியும் கட்டுக்கோப்பும், உடல் தகுதியும் உள்ள ஒருவர் ஃபார்முக்கு வர முடியவில்லை எனில் இனி அவுட் ஆஃப் பார்ம் ஆகும் எவரும் பார்முக்கு வர முடியாது என்றே கூற வேண்டும்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.