• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பும்ரா பந்து வீச்சை இவர் ஒருவர்தான் அடித்து நொறுக்குவார்- கம்பீர் குறிப்பிடும் பேட்ஸ்மேன்

பும்ரா பந்து வீச்சை இவர் ஒருவர்தான் அடித்து நொறுக்குவார்- கம்பீர் குறிப்பிடும் பேட்ஸ்மேன்

பும்ரா

பும்ரா

ஆர்சிபி பேட்டிங்கில் விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல் இருப்பது அதிக வலுவாக அந்த அணியை நிறுத்தியுள்ளது என்கிறார் கம்பீர்.

  • Share this:
    ஐபிஎல் 2021- இரண்டாம் சுற்று ஆட்டங்கள் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் நிபுணர்கள், முன்னாள் வீரர்கள் ஐபிஎல்-க்கு விளம்பரம் சேர்க்கும் முகமாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர், இவையெல்லாம் ஸ்பான்சர்டு பில்ட் அப் இல்லாமல் வேறு அல்ல. அப்படித்தான் கம்பீர் ஆர்சிபி அணி பற்றி விதந்தோதியுள்ளார்.

    கிரிக்கெட்டுக்குள் வணிகம் புகுந்து ஆட்டுவதால் உண்மையான கருத்து எது விளம்பர வாசகம் எது என்பதற்கு இடையேயான வேறுபாடுகள் மறைந்து வருகின்றன. ஆர்சிபி பேட்டிங்கில் விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல் இருப்பது அதிக வலுவாக அந்த அணியை நிறுத்தியுள்ளது என்கிறார் கம்பீர். அதே போல் பும்ராவை ஏ.பி.டிவிலியர்ஸ் அடித்து நொறுக்குவது போல் வேறு யாரும் அடிக்க முடியாது என்றும் கூறுகிரார் கம்பீர்.

    “விராட் கோலியின் மிகப்பெரிய பலமே ஏ.பி.டிவிலியர்ஸ்தான் , ஒரு பேட்ஸ்மென் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சை விளாச முடியும் என்றால் அது டிவிலியர்ஸ் மட்டும்தான் (ஆஸ்திரேலியாவின் பாட் கமின்ஸ் பும்ராவின் ஒரே ஓவரில் 4 சிக்சர்களை அடித்ததை கம்பீர் பார்க்கவில்லை போலும்) பும்ராவுக்க் எதிராக சீரான முறையில் அடித்து ஆடுகிறார் ஏபி.டிவிலியர்ஸ். விராட் கோலிக்கு டிவிலியர்ஸ், மேக்ஸ்வெல் இருப்பது பெரிய சவுகரியம்.” என்கிறார் கம்பீர்.

    இந்நிலையில் தங்கள் அணிக்குள்ளேயே அணி பிரித்து பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகின்றன ஐபிஎல் அணிகள்.  இதில்தான் ஏ.பி.டிவிலியர்ஸ் 46 பந்துகளில் 104 ரன்களை விளாசித்தள்ளினார்.டிவிலியர்ஸ் 10 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 46 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார். இவர் சதம் அடிக்கும்போது ஹர்ஷல் படேல் உள்ளிட்டவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். இவருடன் மொகமட் அசாருதின் 43 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார்.

    கே.எஸ். பரத் இவர் ஐபிஎல் 2021-ல் தான் ஏலம் மூலம் அணிக்குள் வந்தார். டிவிலியர்ஸ் இன்னிங்ஸை முறியடிக்குமாறு ஆடி 47 பந்துகளில் 95 ரன்கள் விளாசி படிக்கல் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்று அசத்தினார். கேப்டன் படிக்கல்லும் 21 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து கே.எஸ். பரத் பிளேயிங் லெவனுக்குள் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: