Home » News » Sports » IPL A NEW AZHAR FROM KERALA PLUNDERED MUMBAI BY HITTING 54 BALL 137 NOT OUT MUT

54 பந்துகளில் 137 ரன்கள்; 9 பவுண்டரிகள், 11 சிக்சர்கள்; ஐபிஎல் உரிமையாளர்களை ஈர்க்கும் இளம் முகமது அசாருதீன்

இவர் அன்று 92 ரன்களில் இருந்த போது கேப்டனும், ரன்னருமான சஞ்சு சாம்சன் இவரிடம் வந்து ஒன்று, இரண்டு என்று ரன்களைச் சேர்த்து சதம் அடி என்றார்.

54 பந்துகளில் 137 ரன்கள்; 9 பவுண்டரிகள், 11 சிக்சர்கள்; ஐபிஎல் உரிமையாளர்களை ஈர்க்கும் இளம் முகமது அசாருதீன்
கேரள தொடக்க வீரர் முகமது அசாருதீன்.
  • Share this:
ஹைதராபாத்திலிருந்து இந்திய அணியில் ஆடிய ஸ்டைலிஷ் முகமது அசாருதீன் இந்திய கேப்டனாக உயர்ந்து பிரமாதமான சில வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார் அறிமுகத்திலேயே தொடர்ச்சியாக 3 டெஸ்ட் சதங்களை அடித்தவர்.  ஆனால் இப்போது ஐபிஎல் உரிமையாளர்களை ஈர்த்திருப்பது கேரளாவைச் சேர்ந்த முகமது அசாருதீன். இவர் சஞ்சு சாம்சனின் சக வீரர்.

இவர் அன்று சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் மும்பை அணிக்கு எதிராக தொடக்க வீரராக இறங்கி 54 பந்துகளில் 9 பவுண்டரிகள் 11 சிக்சர்கள் விளாசி 137 ரன்களை அடித்து மும்பை பீல்டர்களை மைதானம் நெடுக ஓட விட்டார்.

இவர் அன்று 92 ரன்களில் இருந்த போது கேப்டனும், ரன்னருமான சஞ்சு சாம்சன் இவரிடம் வந்து ஒன்று, இரண்டு என்று ரன்களைச் சேர்த்து சதம் அடி என்றார். இவரும் ஊம் ஊம் என்று தலையாட்டி விட்டு அடுத்த பந்தே மும்பை இடது கை ஸ்பின்னர் ஷாம்ஸ் முலானியை இரண்டு ஸ்டெப் இறங்கி வந்து லாங் ஆஃப் மேல் ஒரே தூக்கு... சிக்ஸ் அடித்தார், பிறகு 2 ரன்கள் அடித்து சதம் கண்டார்.


மும்பைக்கு எதிராக சீனியர் மட்டத்தில் எந்த ஒரு வடிவத்திலும் கேரளா பெற்ற முதல் வெற்றியாகும் இது, முகமது அசாருதீன் அனைவரையும் இந்த அதிரடி ஆட்டம் மூலம் ஈர்த்துள்ளார். குறிப்பாக பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் அணி உரிமையாளர்கள் அசாருதீனைக் குறிவைத்து வருகின்றனர்.

2015-16-ல் இவர் அறிமுகமானார். இவரது ஒரே சதம் இதற்கு முன்பாக 2 ஆண்டுகளுக்கு முன் பஞ்சாப்புக்கு எதிராக எடுக்கப்பட்டதே, ஆனால் மும்பைக்கு எதிரான இந்த டி20 இன்னிங்ஸ், 54 பந்தில் 137 ரன்கள் இவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் எந்த அணி இவரை ஏலம் எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
First published: January 18, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories