Home /News /sports /

ரோகித் சர்மாவைக் குத்திகாட்டும் பதிவு?- கோலியைத் தூக்கிப்பிடிக்கும் ஆர்சிபி

ரோகித் சர்மாவைக் குத்திகாட்டும் பதிவு?- கோலியைத் தூக்கிப்பிடிக்கும் ஆர்சிபி

 ரோகித் சர்மா-கோலி -

ரோகித் சர்மா-கோலி -

விராட் கோலியை ஒருநாள் போட்டி அணி கேப்டன்சியிலிருந்து இறக்கியது பலதரப்பட்ட எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது, ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தது வரவேற்பும் விமர்சனங்களும் பெற்றுள்ளன. இந்நிலையில் ஆர்சிபி அணி விராட் கோலியை புகழ்ந்து தள்ளும்  விதமான பதிவு ஒன்றை தன் சமூக ஊடகப்பகக்த்தில் வெளியிட்டுள்ளது

மேலும் படிக்கவும் ...
    விராட் கோலியை ஒருநாள் போட்டி அணி கேப்டன்சியிலிருந்து இறக்கியது பலதரப்பட்ட எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது, ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தது வரவேற்பும் விமர்சனங்களும் பெற்றுள்ளன. இந்நிலையில் ஆர்சிபி அணி விராட் கோலியை புகழ்ந்து தள்ளும்  விதமான பதிவு ஒன்றை தன் சமூக ஊடகப்பகக்த்தில் வெளியிட்டுள்ளது.

    ஆர்சிபி தன் ட்விட்டர் பக்கத்தில், ‘லீடர், போர்வீரன், உத்வேகம் , ஒரே ஒரு கிங் கோலிதான் இருக்க முடியும், உங்கள் பிராண்ட் கிரிக்கெட் தான் எதிர்காலம் பின்பற்ற ஒரு டெம்ப்ளேட்’ என்று பதிவிட்டுள்ளது, ரோகித் சர்மா ரசிகர்களிடையே மனத்தாங்கலை ஏற்படுத்தியுள்ளது, எது எப்படியோ, தமிழ் சினிமாவில் தல/ தளபதி போன்று இப்போது ஹிட் மேன் / கிங் கோலி என்ற எதிர்மறை உருவாக்கப்பட்டு ரசிகர்களின் காலத்தையும் சிந்தனையையும் ஊடகங்கள் மழுங்கடித்து வருகின்றன.

    கோலியின் லீடர்ஷிப்ப்பை இவ்வளவு தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. அவரது பிராண்ட் கிரிக்கெட் என்ன? 2 ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் திணறுவதா?

    கோலிக்கு 48 மணி நேரம் கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன்சியிலிருந்து விலகவில்லை, உடனே நீக்கப்பட்டார், ஆனால் கங்குலி கூறும்போது கோலியுடன் பேசித்தான் முடிவெடுத்ததாகக் கூறினார். டி20, ஒருநாள் அணிகளுக்கு இருவேறு கேப்டன்களை வைத்திருப்பது அபத்தம் என்பதை கோலிக்கு கங்குலி புரிய வைத்துள்ளார்.

    டி20 கேப்டன்சியை உதறாதே என்று ஏற்கெனவே எச்சரித்துள்ளனர், ஆனால் கோலி யார் பேச்சை கேட்பார், அதோடு இல்லாமல் ‘என்னை ஒரு நாள் அணி கேப்டன்சியிலிருந்து முடிந்தால் தூக்கிப் பார்’ என்று அணித்தேர்வுக்குழுவுக்கே சவால் விடுப்பது போல் நடந்து கொண்டார். கல்லூரியில் மாணவர் தலைவர் தேர்தலில் வென்ற மாணவர் வந்து கொஞ்ச காலம் அட்டகாசம் செய்வார் அது போல் கோலி கேப்டன்சியை அப்படித்தான் கையாண்டார், கேப்டன்சி என்பது வெறும் வெற்றி பெறுவது மட்டுமல்ல, எப்படி வேண்டுமானாலும் வெற்றி பெறுவது மட்டுமல்ல. அணியின் வீரர்களின், நாட்டின் மீதான மதிப்பு சம்பந்தப்பட்டது.

    Also Read: ஒருநாள், டி20-களுக்கு 2 கேப்டன்கள் இருக்க முடியாது- கோலி நீக்கம் குறித்து கங்குலி


     இந்நிலையில்தான் விராட் கோலியைப் பாராட்டி ஆர்சிபி பதிவு வெளியிட்டுள்ளது.





    அதில், “லீடர். போர்வீரன், உத்வேகம்.. ஒரேயொரு கிங் கோலிதான் இருக்க முடியும். நன்றி கேப்டன் விராட் கோலி இந்திய அணியை வழிநடத்தி முக்கியத்துவம் மற்றும் ஆக்ரோஷம் காட்டிய யுகம் முடிவுக்கு வந்தது. உங்கள் பிராண்ட் ஆஃப் கிரிக்கெட் எதிர்காலத்திற்கு ஒரு டெம்ப்ளேட்” என்று பதிவிட்டுள்ளது.

    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, RCB, Rohit sharma, Virat Kohli

    அடுத்த செய்தி