'என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க பிட்ச' - கோலி, ரோஹித்-க்கு சேப்பாக்கம் கொடுத்த ட்விஸ்ட்

'என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க பிட்ச' - கோலி, ரோஹித்-க்கு சேப்பாக்கம் கொடுத்த ட்விஸ்ட்

சேப்பாக்கம்

இந்த முறை எந்த அணிக்கு ஹோம் கிரவுண்டில் ஆடும் வாய்ப்பு கிடையாது என பிசிசிஐ அறிவித்தது

  • Share this:
    14-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று துவங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் திருவிழாவில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்தப்போட்டி இன்று இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐபிஎல் போட்டியை நேரில் கண்டு களிக்க ரசிகர்களுக்கு அனுமதியில்லை. கடந்தாண்டு போலவே பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    சென்னை சேப்பாக்கம் மைதானம் பொதுவாக ஸ்பின்னர்களுக்கு சாதமாக இருக்கும். இதன்காரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஸ்பின்னர்களை அப்படியே கொத்தாக தூக்கிடும். முத்தையா முரளிதரன்,ஹர்பஜன் சிங், ரெய்னா, ஜடேஜா, இம்ரான் தாஹீர் என சிஎஸ்கேவில் ஆடிய, ஆடிக்கொண்டிருக்கும் ஸ்பின்னர்ஸ் ஏராளம். இந்த முறை எந்த அணிக்கு ஹோம் கிரவுண்டில் ஆடும் வாய்ப்பு கிடையாது என பிசிசிஐ அறிவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இங்க மேட்ச் கிடையாது சிஎஸ்கே மேட்ச் எல்லாம் டெல்லி, மும்பை மைதானங்களில்தான் நடக்கவுள்ளது.

    சிஎஸ்கே சேப்பாக்கத்துல ஆடுல அப்புறம் எதுக்கு இந்த டிராக்-ன்னு நினைச்சாங்களோ என்னவோ பிட்ச் மாற்றப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்துல காட்சியளிக்கும் பிட்ச் கருப்பு நிறத்தில் இருக்கிறது. ஆர்.சி.பி-யின் ஆஸ்தான ஸ்பின்னர் சாஹல்-ன்னு என்னவோ இதுகொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கும். ஸ்பின்னிங் டிராக் மைண்டுல வச்சு ஆர்.சி.பி, மும்பை வியூகங்கள் வகுத்திருந்தால் அவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே. இந்த கருப்பு நிற பிட்சில் பந்து டெர்ன் ஆகாது என கூறப்படுகிறது. இது இரண்டு அணிகளுக்குமே சவாலானதாகத் தான் இருக்கும். சேப்பாக்கத்தின் சேலன்சை எதிர்கொள்ளும் இரண்டும் அணிகளும் தயாராக உள்ளனர். முதல் போட்டியை எந்த அணி வெற்றியுடன் தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
    Published by:Ramprasath H
    First published: