4 வருடங்களுக்கு பிறகு மேக்ஸ்வெல் அடித்த அரைசதம்.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா?

4 வருடங்களுக்கு பிறகு மேக்ஸ்வெல் அடித்த அரைசதம்.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா?

மேக்ஸ்வெல்

முதலாவது ஆட்டத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் 100 மீட்டருக்கு ஒரு பிரம்மாண்ட சிக்ஸரை விளாசி மேக்ஸ்வெல் இஸ் பேக் என சொல்லாமல் சொன்னார்.

  • Share this:
    நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இந்த சீசனில் களமிறங்கியுள்ளார். 2017 ஐபிஎல் சீசனுக்கு பிறகு மேக்ஸ்வெல் பெரிய அளவில் ஆடவில்லை. இதனையடுத்து அணிகள் அவரை விடுவிக்கத் தொடங்கியது. டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் என அணிகள் மாறினார்.2020 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு விளையாடிய மேக்ஸ்வெல் வெறும் 108 ரன்கள் தான் அடித்தார். இருந்தாலும் மேக்ஸ்வெல்லுக்கு ஐபிஎல் அணிகள் போட்டிப்போட்டன. நடப்பு ஐபிஎல் தொடருக்கான ஆக்‌ஷனில் கூட மேக்ஸ்வெல்லை எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் கடும் போட்டி போட்டன. ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு மேக்ஸ்வெல்லை டிக் செய்தது. இது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.

    மேக்ஸ்வெல் ஒழுங்காக ஆடியிருந்தால் ஏன் அவரை அணிகள் விடுவிக்கின்றன என கம்பீர் கேள்வி எழுப்பி இருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் 100 மீட்டருக்கு ஒரு பிரம்மாண்ட சிக்ஸரை விளாசி மேக்ஸ்வெல் இஸ் பேக் என சொல்லாமல் சொன்னார். அந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கோலி 33 ரன்களில் ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஹைதராபாத் பந்துவீச்சில் ஆர்.சி.பி வீரர்கள் ஒரு பக்கம் விக்கெட்டுகளை பறிக்கொடுக்க மேக்ஸ்வெல் தனிஆளாக போராடினார்.

    கடைசி பந்துவரை களத்தில் இருந்த மேக்ஸ்வெல் 59 ரன்கள் விளாசினார். இந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். 2016 ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் அரைசதம் அடித்துள்ளார். 4 வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் அரைசதம் விளாசியுள்ளார். 2019-ம் ஆண்டு மேக்ஸ்வெல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை. அதுமட்டும் இல்லை போன வருடம் ஐபிஎல் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸரை கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேக்ஸ்வெல்லுக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டம் என்றால் அது 2014-ம் ஆண்டு தான். அந்த சீசனில் தான் 552 ரன்களை விளாசினார். அதிகப்பட்சமாக 95 ரன்களை விளாசியிருந்தார்.
    Published by:Ramprasath H
    First published: