ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கலக்கப் போகும் 5 இளம் வீரர்கள் குறித்த பட்டியலை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ளார். இந்த பட்டியல் கிரிக்கெட் உலகில் விவாதத்தை கிளப்பியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி மினி ஏலம் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. ஐபிஎல் தொடங்கப்படுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அணிகள் போட்டிகளுக்கு தயாராகி வருகின்றன. சென்னை சூப்பர் கிங்சை பொருத்தளவில், தோனி விளையாடவுள்ள கடைசி தொடராக இந்த ஐபிஎல் சீசன் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இளம் வீரர்கள் யார் யார் என்பது குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேட்டி அளித்துள்ளார். கங்குலி ஐபிஎல் தொடர் குறித்து கூறியதாவது- இந்த ஐபிஎல் தொடரில் பிரித்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட், உம்ரான் மாலிக், சுப்மன் கில் ஆகியோர் மதிப்பு மிக்க வீரர்களாக இருப்பார்கள். சூர்ய குமாரை பெஸ்டான ஆட்டக்காரர் என்று நான் கூறுவேன். அவரை இன்னும் இளம் வீரர் என்று சொல்ல முடியாது. டி20 ஃபார்மேட்களில் பிரித்வி ஷா அதிக திறமைகள் கொண்டவர். சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பந்த் விளையாடினால் அவர் முக்கியமான ஆட்டக்காரராக இருப்பார்.
டி20 மேட்ச்சுகளில் மிகச் சிறந்த மிகவும் இளமையான வீரர் என்றால் அவர் ரிஷப் பந்த் தான். அவருக்கு 23 வயதுதான் ஆகிறது. ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு அற்புதமாக உள்ளது. இந்த தொடரில் அவர் தனது வேகப்பந்து வீச்சால், ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்துவார் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். கார் விபத்து காரணமாக படுகாயம் அடைந்துள்ள ரிஷப் பந்த் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இந்த ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2023