ஐபிஎல்-ல் 2-ம் தர ஆஸ்திரேலிய வீரர்களைத்தான் விரும்புகின்றனர், அஸ்வின் புகழ்ந்த நியூஸிலாந்து வீரரை அடுத்து சைமன் டூல் விமர்சனம்

99 நாட் அவுட் டெவன் கான்வே, ஆஸி. தோல்வி. நியூஸி வெற்றி

ஆனால் இதனையும் கிண்டல் செய்யுமாறு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், “டெவன் கான்வே தென் ஆப்பிரிக்கர் இல்லையா?” என்று டூலிடம் கேட்டுள்ளார்.

 • Share this:
  ஐபிஎல் 2021 ஏலத்தில் நியூஸிலாந்தின் தென் ஆப்பிரிக்காவில் பிறந்த டெவன் கான்வேயை ஏலம் எடுக்க ஒருவரும் முன் வரவில்லை, ஆனால் நேற்று முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நியூஸிலாந்து வென்ற போட்டியில் டெவன் கான்வே 59 பந்துகளில் 99 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இதில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடங்கும்.

  19/3 என்று திணறிய போது அவர் பிரமாதமாக ஆஸ்திரேலியா ஸ்கோரை 184 ரன்களுக்குக் கொண்டு சென்றார். ஆஸ்திரேலியா பிறகு போல்ட், சவுதி, இஷ் சோதி பவுலிங்கில் சரிந்து 131 ரன்களுக்குக் காலியானது. ஆனால் டெவன் கான்வேயை எடுக்க ஐபிஎல் அணிகள் எதுவும் முன் வரவில்லை. ஆனால் இரண்டாம் தர ஆஸ்திரேலியா வீரர்களை ஏலம் எடுத்துள்ளதாக நியூஸிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டூல் கடுமையாகச் சாடினார்.

  டெவன் கான்வேயின் இந்த டி20 இன்னிங்சை துல்லியமாகப் பாராட்டிய அஸ்வின், தன் ட்விட்டரில், கிளாப் ஸ்மைலிகளுடன் “டெவன் கான்வே ஒரு 4 நாட்கள் தாமதமாக இன்னிங்ஸை ஆடிவிட்டார், என்ன மாதிரியான ஒரு ஆட்டம்” என்று புகழ்ந்துள்ளார்.

  ஆனால் சைமன் டூல் இந்த இன்னிங்ஸை அவர் முன்னாடியே ஆடியிருந்தாலும் ஐபிஎல் ஏலத்தில் எடுபட்டிருக்காது என்று கூறி அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.

  “சொல்ல முடியாது அஸ்வின்! இரண்டாம் தர ஆஸ்திரேலிய வீரர்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் நியூஸிலாந்தின் டாப் வீரர்களுக்கு கிடைப்பதில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டில் இது பல ஆண்டுகளாக நடந்து வருவதுதான்.

  ஆனால் இதனையும் கிண்டல் செய்யுமாறு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், “டெவன் கான்வே தென் ஆப்பிரிக்கர் இல்லையா?” என்று டூலிடம் கேட்டுள்ளார்.

  ஐபிஎல் ஏலத்தில் கடந்த ஐபிஎல் தொடரில் சொதப்பிய கிறிஸ் மோரிஸ் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஏலத்தொகையான ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். சொதப்பு சொதப்பென்று சொதப்பி வரும் கிளென் மேக்ஸ்வெலை பல கோடி ரூபாய்களுக்கு ஆர்சிபி ஏலம் எடுத்தது. ஆனால் டெவன் கான்வேவுக்கு இடமில்லை.

  ஆனால் இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது, ஐபிஎல் ஏலத்தில் பியூர் பேட்ஸ்மென்களுக்கு கிராக்கி இல்லை, ஆல்ரவுண்டர்களுக்குத்தான் அதிக கிராக்கி உள்ளது எனவே டெவன் கான்வே பியூர் பேட் என்பதால் விடப்பட்டிருக்கலாம்.
  Published by:Muthukumar
  First published: