• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021: இந்த சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடிப்பது கடினம் - சுனில் கவாஸ்கர்!

IPL 2021: இந்த சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடிப்பது கடினம் - சுனில் கவாஸ்கர்!

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் சீசனில் இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி மும்பை இந்தியன்ஸ்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்த சீசனிலும் இந்தியன் பிரீமியர் லீக்கை (IPL) வெல்லும் வாய்ப்பு மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு இருப்பதாக முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் இரண்டு முறை தற்காப்பு சாம்பியன்கள், ஹெவிவெயிட் இந்திய வீரர்கள் மற்றும் சர்வதேச வீரர்களைக் கொண்ட மிக வலுவான அணியாக இப்பொது உள்ளது. இது தொடர்பாக கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசியதாவது, " இந்த முறையும் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடிப்பது என்பது மற்ற அணிகளுக்கு கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அந்த அணியின் வீரர்கள் நல்ல பார்மில் இருப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம்.

இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரின் பேட்டிங் ஸ்டைல், மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்ற மும்பை இந்திய வீரர்கள் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதைக் காட்டியுள்ளனர் ”என்று கூறினார். மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு வரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் நியூசிலாந்தின் டென்ட் போல்ட் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மேலும் அந்த அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான சக்தி நிறைந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த சீசனில் அவர்களுக்கு கூடுதல் போனஸாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சுக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 சர்வதேச தொடரில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்ற இந்திய அணியின் வலது கை வீரர் ஹர்திக் பாண்டியா மொத்தம் அந்த தொடரில் 17 ஓவர்கள் பவுலிங் செய்துள்ளார். மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் அவர் ஒன்பது ஓவர் ஸ்பெல் பவுலிங் வீசியுள்ளார். அது மிகக் குறுகிய ஓவர்களாக இருந்தாலும் தொடரை கைப்பற்ற இந்தியாவுக்கு உதவுவதில் முக்கிய பங்கு வகித்தது.

Also read... டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டன் ரிஷப் பண்ட்டின் சிறப்பான ஐபிஎல் ஆட்டங்கள்!

மேலும் இது குறித்து கவாஸ்கர் தெரிவித்தாவது, "ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸுக்கு மட்டுமல்ல, அவர் ஒன்பது ஓவர்கள் பவுலிங்கை பார்ப்பது இந்திய கிரிக்கெட்டுக்கும் மிக முக்கியமானது. அதாவது அவர் ஒன்பது ஓவர்கள் பந்துவீசத் தயாராக உள்ளார். இது ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்றாலும், ஹர்திக் அந்த போட்டிகளுக்கு தயாராகி வருகிறார் என்பதைக் காட்டுகிறது.

அவர் திரும்பி வந்த விதம் மும்பை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு மிகவும் நல்லது”என்று குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் சீசனில் இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் தான். இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 2021 சீசன் போட்டிகள் ஏப்ரல் 9ம் தேதி ஆரம்பமாகின்றன. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: