விராட் கோலி அணியை வழி நடத்துவதில் முன்னுதாரணமாக இருக்கிறார் - ஏபி டிவில்லியர்ஸ் புகழாரம்

விராட் கோலி அணியை வழி நடத்துவதில் முன்னுதாரணமாக இருக்கிறார் - ஏபி டிவில்லியர்ஸ் புகழாரம்

விராட் கோலி, ஏ.பிடிவில்லியர்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனான விராட் கோலி வீரர்களை ஊக்கப்படுத்தி "தங்கள் அணியை வழி நடத்திச் செல்வதில் முன்னுதாரணமாக இருக்கிறார்" என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் டி20 (ஐபிஎல்) போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ம் தேதி  நடைபெற உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதற்காக அனைத்து ஐபிஎல் அணி வீரர்களும் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மூன்று சீசன்களில் இரண்டில் எட்டு அணிகளில் கடைசி இடத்தைப் பிடித்த பெங்களூர், அடுத்த திங்கட்கிழமை துபாயில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான தனது போட்டியினை தொடங்குகிறது.

  இதுகுறித்து பேட்டியளித்த, ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் அனுபவ வீரரான ஏபி டிவில்லியர்ஸ், ஐக்கிய அரபு அமீரகத்தில் சனிக்கிழமையன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளநிலையில் இந்திய கேப்டன் கோலி மிகவும் கடின உழைப்பைக் கொடுக்கிறார். அதற்காக விராட் கோலிக்கு நிறைய கடமைப்பட்டு இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

  மேலும், விராட் கோலி முன்னின்று அணியை வழிநடத்துவதில் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என ஏபி டி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். அவர் ஒரு “கேப்டனாக முன்னால் இருந்து அணியை வழிநடத்தி செல்லும்போது அதை பின்பற்றுவது மிகவும் எளிதானது" என்றும் அவரது செல்வாக்கு அருமையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  2013ம் ஆண்டு பெங்களூர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி, ஐபிஎல் சீசனில் நுழைவதை "ஒருபோதும் அமைதியாக உணரவில்லை" என்று கூறினார். இதுகுறித்து பேசிய டிவில்லியர்ஸ், இது ஒரு தந்திரமான விஷயம், ஏனென்றால் ஒவ்வொரு பருவத்திலும் நாங்கள் மேம்படுவோம் என்று கூறுகிறோம். ஆனால் இது வித்தியாசமானது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், அவ்வளவு தான் நான் உங்களுக்கு சொல்ல முடியும்" என்று அவர் தெரிவித்தார்.


  மேலும் நாங்கள் சிறந்த அணியை பெற்றுள்ளோம் என்று நான் கூறமாட்டேன். எனினும் எங்கள் அணியில் ஒரு வித்தியாசமான உணர்வு இருக்கிறது, அதை என்னால் விளக்க முடியவில்லை, ஆனால் அது மிகவும் உற்சாகமானது. காம்பினேஷன்களை பார்த்தால் எல்லா இடங்களிலும் பேக்கப் உள்ளது. மேலும் "விராட் சிறந்த அணி தலைவர், அவருடன் விளையாட எங்களுக்கு விருப்பங்கள் உள்ளது" என்று ஏபி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
  Published by:Karthick S
  First published: