விளையாட்டு

  • associate partner

IPL 2020 : தொடர்ந்து 3 ஆண்டுகளாக 400-க்கு மேல் ரன்களை குவித்த விராட் கோலி.. ஆர்.சி.பி அணி பாராட்டு..

விராட் கோலி இனி வரும் அடுத்த சீசனில் எத்தனை ரன்கள் வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று ஆர்.சி.பி அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுப்பியுள்ள கேள்விக்கு விராட் கோலியின் ரசிகர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

IPL 2020 : தொடர்ந்து 3 ஆண்டுகளாக 400-க்கு மேல் ரன்களை குவித்த விராட் கோலி.. ஆர்.சி.பி அணி பாராட்டு..
ஐபிஎல் 2020
  • Share this:
இந்த ஆண்டு ஐபிஎல் 2020 தொடரில் எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெங்களூரு அணி இறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. என்னதான் பிளேஆஃப்களில் இருந்து வெளியேற்றப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக இந்த சீசனில் ஆர்சிபி அணியினர் ஒரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த சீசனின் புள்ளி பட்டியலில் ஆர்சிபி பெரும்பாலும் முதல் 3 இடங்களில் இருந்தது. இதில் விராட் கோலியின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் அணிக்கு உறுதுணையாக இருந்து வழிநடத்தினார்.  பலரது விமர்சனங்களை கவனம் கொள்ளாது, 15 போட்டிகளில் 42.36 என்ற சராசரியில் மொத்தம் 466 ரன்களை குவித்தார் விராட்கோலி.

மேலும் 3 அரை சதங்களை அடித்தார். ஐபிஎல்லின் இந்தசீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் முதல் 10 இடங்களைப் பிடிப்பார் என ஆர்சிபி அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளனர்.


மேலும் அந்த பதிவில் கேப்டன் கோலி தொடர்ந்து 3வது சீசனை 400+ ரன்களுடன் முடித்தார். 2021-ல் கிங் கோலி எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்? ” எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த கேள்விக்கு ரசிகர்கள் தங்கள் பதில்களை அளித்து வருகின்றனர். ஐபிஎல்லின் அனைத்து சீசன்களிலும் அதிக ரன்கள் எடுத்த வீரர் கோலி . அவர் மொத்தம் அவர் விளையாடிய 184 இன்னிங்ஸ்களில் 58168 ரன்களுடன் 38.16 சராசரியை வைத்துள்ளார்.

முந்தைய இரண்டு சீசன்களில்  464 ரன்கள் (சராசரி 33.14) மற்றும் 530 ரன்களை (சராசரி 48.18) குவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டில் அவர் 16 போட்டிகளில் 973 ரன்கள் எடுத்தார். அது குறிப்பிடத்தக்க சராசரியாக 81.08 என்ற கணக்கில் இருந்தது. அவர் அந்த ஆண்டில் 4 சதங்களையும் 7 அரைசதங்களையும் அடித்தார். இந்த முறையும் இறுதி போட்டிக்கு செல்ல முடியாததால் நிச்சயமாக கோலி ஏமாற்றமடைந்துள்ளார்.

குறிப்பாக கடைசி போட்டியில், எஸ்.ஆர்.எச் அணி வைத்த இலக்கில் 137 ரன்களை மட்டுமே விராட் கோலி அணியால் எடுக்க முடிந்தது. அந்த ஆட்டத்தில் அவரது அணி மோசமான திறனை வெளிப்படுத்தினர். கேப்டன் விராட் கோலி வெறும் ஆறு ரன்களில் அவுட் ஆனார். இருப்பினும் அடுத்த ஆண்டு விராட்கோலி மற்றும் ஆர்.சி.பி அணியினர் தங்களை சுற்றி இருக்கும் விமர்சனங்களை தகர்த்து அடுத்த ஆண்டு வீர நடை போடும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
First published: November 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading