விளையாட்டு

  • associate partner

தனியாளாக போராடிய வில்லியம்சன்: பந்து வீச்சில் அசத்திய சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தனியாளாக போராடிய வில்லியம்சன்: பந்து வீச்சில் அசத்திய சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
சிஎஸ்கே வீரர்கள்
  • Share this:
ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியும் சென்னை அணியும் மோதின. டாஸ்வென்ற சென்னை பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. அதனையடுத்து, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். வார்னர் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனையடுத்து, மணிஷ் பாண்டேவும் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன்அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதனையடுத்து, கேன் வில்லியம்சன் களமிறங்கினார்.

மறுபுறம் நிதானமாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ 23 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் வில்லியன்சன் மட்டும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தார். அவர், 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்நிலையில், சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் கரண் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ORANGE CAP:


PURPLE CAP:

அவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தநிலையில், 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதன் மூலம், சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
First published: October 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading