கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கோலி, டிவில்லியர்ஸின் அதிரடியான ஆட்டத்தால் பெங்களூரு அணி 205 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியாவில் களைக்கட்டி வரும் 12-வது சீசன் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கோலி, பர்தீவ் படேல் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி அரை சதத்தை கடந்தனர். பெங்களூரு அணி 64 ரன்கள் எடுத்திருந்த போது படேல் 25 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
அவரை தொடர்ந்து டிவில்லியர்ஸ் களமிறங்கினார். இந்த சீசனில் டிவில்லியர்ஸ் சொதப்பி வந்த நிலையில் இந்தப் போட்டியில் அவரது மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் டிவிலியர்ஸ் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். மறுமுனையில் கேப்டன் கோலியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் கோலி 84 ரன்களிலும், டிவில்லியர்ஸ் 63 ரன்களிலும் அவுட்டாகினர்.
இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் குவித்தன. கொல்கத்தா அணி சார்பில் குல்தீப், சுனில் நரைன், ரானா ஆகியோர் தல ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். கொல்கத்தா 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆடி வருகிறது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
ஐ.பி.எல் தகவல்கள்:
POINTS TABLE:
SCHEDULE TIME TABLE:
ORANGE CAP:
PURPLE CAP:
RESULTS TABLE:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.