இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் மோதல்

news18
Updated: April 17, 2018, 3:05 PM IST
இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் மோதல்
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
news18
Updated: April 17, 2018, 3:05 PM IST
இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின்  லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும்  ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணி நாளைய போட்டியிலாவது தோல்வியிலிருந்து மீளுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

நடப்பு ஐபிஎல் தொடரின் 14-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த ஆட்டம் இன்று  இரவு 8 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதற்கு முன் நடைபெற்ற மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றிலும் தோல்வியையே தழுவியுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியிடம் 1 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 1 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியைத் தழுவியது. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதியது. 194 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தப் போதிலும் பந்துவீச்சு மோசமாக உள்ளதாக காரணத்தினால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 1 போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.  முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.  இரண்டாவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதியது. இதில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.  எனவே இன்று நடக்க இருக்கும் போட்டி இரு அணிகளுக்கு முக்கியத்துவம் வாயந்தது. குறிப்பாக் நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதியவைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு அணிகளிலும் பெரிய மாற்றங்கள் இருக்காது என தகவல் வெளிவந்துள்ளது.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்